பக்கம் எண் :

154செந்தமிழ்க் காஞ்சி

உ.

 
   
   வானே மீன் உழுபோதே வையகம் பகமீதே  
   ஈனே கயவர் கோதே ஏகாங்கி புகவேதே

(தினகர)

   
   புனைமங்க ளாகரமே புதுநிலமுங் ககனமுமே  
   வினைமுதிர் சிங்காசனமே விகசிதம் ஆளுகை சதமே.

(தினகர)

49
நடுத்தீர்ப்பு

 

ஏசு வலப் பக்கத்தார்க்குச் சொல்வது

 

 

ப.

 
   
   வலமுக மெய்ப் பக்தரின்றே வந்துற வரபோகம்  
   

து.ப.

 
   
   உலக முண்டானது முதலாய் உங்கட் கமைந்த அரசுற

(வலமுக)

   

உ.

 
   
   நானோ பசிதாகம் பிணி ஆனேன் அயலெனினும் போனக  
   பானாதிகள் உவந்தளித்த பாரோப காரிகணீர்

(வலமுக)

50
இடப்பக்கத்தார்க்குச் சொல்வது

 

ப.

 
   
   இதொடேக இடவீர் ஏது மின்றி  
   ஏற்றீர் சாபமே  
   

து.ப.

 
   
   இதி1 தன் தூதரோ டிறங்கவே யமைந்த  
   இறுவா யில்லெரி ஏகி வேமினே

(இதொ)

   

உ.

 
   
   தரா தலமுனமென் சிறார்பசி மிகவே  
   பராமுக மிருந்து தராதுண வுடைகள்  
   உறாநொது மல்பிணி யறாநிலை சிறையில்  
   வரா திருந்ததென்? அபராதிகளே சொலும்

(இதொ)

   

1. இதி - சாத்தான்.