மழவர்மிகுந் தேவசேனை
மகிமையுடன் கூடிமண |
முழவறைந்தார்
திசைகளெல்லாம் முழங்கிடவே யீருலகும் |
விழவயரு மென்றேயொரு
விளம்பரமுஞ் செய்ததென்னே |
அழகுயரும் ஆட்குக்குட்டி
யானவர்க்கே கல்யாணம்! |
|
பரமதந் தனைவிட்டுப்
பாரின்மிக ஏழையாகிச் |
சிரமமுடன் பாரந்தாங்கிச்
சிரஞ்சாய்க்க இடமின்றி |
மரமதிலே
மடலேறி மணமகளை மீட்டெழுந்த |
அருவரனாம் ஆட்டுக்குட்டி
யானவர்க்கே கலியாணம்! |