| 1. |
பிச்சைக்காரா!
பிச்சைக்காரா! பெரும்பசியோ? உன்தனுக்கு |
| |
இச்சிக்கும்
உணவுகளை என்னிடம்சொல், இட்டிடுவேன். |
| |
|
| 2. |
பேசக்கூட
முடியவில்லை பெரிதும் தொண்டை கட்டினதோ? |
| |
நேசத்துடன்
மருந்திடுவார் நினைக்கில்லையா? |
| |
என்செய்வேன் |
| |
|
|
3. |
மூடஒரு துணியின்றி
முன்பனியில் இரவிலே நீ |
| |
நீடுவேளை நிலாவெளியில்
நிற்கிறாயே! பாவம்! பாவம்! |
| |
|
|
4. |
நில்லாதே, கால்நோகும்
நினக்கு ஒன்றும் பலமில்லை |
| |
எல்லாம்என் அன்னையிடம்
எடுத்துச்சொல்வேன் இங்கு உட்கார் |