பக்கம் எண் :

10மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

3. உறுதிச் சுற்றத்தார் என்னும் நல்வாழ்வுத் துணைவர்:  நட்பாளர், அந்தணாளர்  (முனிவர்),  மடைத்தொழிலாளர் (சமையற்காரர்),      மருத்துவர்,  குறிகாரர் (கணியர், புள்ளுரைப்போர், விரிச்சிகர் முதலியோர்)
 
4. உயிர்காப்புத் துணைவர்: மெய்காவலர், வேளைக் காரர் என்னும் உற்றிடத்துதவிகள்.

5. உடன்கூட்டத்தார்  அல்லது   உழையர்: தலைமையமைச்சர்,      கருமத்தலைவர்,  குற்றேவலர் முதலியோர்  அரசன்  கட்டளையை நிறைவேற்றுவார்.  அரசன்  கட்டளையை  அருகிருந்து கேட்பவன் திருவாய்க்கேள்வி.  திருவாய்க்  கேள்வி   சொன்ன  அரசன்      கட்டளையை ஓலையிற் குறித்துக்கொள்பவன் திருமந்திரவோலை. திருமந்திர வோலையர்க்குள் தலைமையானவன் திருமந்திரவோலை நாயகம். அரசன் கட்டளைகளை உடனுடன் அவரவர்க்கு அனுப்பி வைப்பவன் விடையிலதிகாரி. இவ் வினையில் ஈடுபட்ட கணக்கர் விடையிலார்.

அரசிறைப் பணியாளர்
  
  உழவர்  இறுத்த  (செலுத்திய)  ஆறிலொரு  பங்காகிய  நெல்லும்,  பிற தொழிலாளர்  செலுத்திய  வரிக்காசும் ஆகிய  அரசிறையைத்  தண்டுபவர் தண்டுவார். அரசனுக்கு இறுப்பது அரசிறை. அது  குடிகளைப்  புரப்பதற்கு (காப்பதற்கு) வாங்கப் பட்ட வரியாதலின் புரவுவரி யெனப்பட்டது. புரவுவரிச் செய்தியைக்  கவனிக்கும்   ஆட்சித்துறை 
(Department)   புரவுவரித் திணைக்களம். அதன் தலைவன் புரவுவரித் திணைக்கள நாயகம். வரித்துறை அலுவலர் வரியிலார். வரிகளைப் பல்வேறு செலவிற்கும் பங்கிடுவார் வரிக்கூறு செய்வார்.

  பொன்வெள்ளிக்  காசுகளின்  தூய்மையை  நோட்டஞ்  செய்பவன் (சோதிப்பவன்) வண்ணக்கன்.

அரண்மனை யூழியர்

  அரசன்   கட்டளைகளையும்   அறிவிப்புகளையும்,  அரசுவா  என்னும்  பட்டத்து யானைமேலேறி  முரசறைந்து தலைநகரில் விளம்பரஞ்  செய்பவன்  வள்ளுவன்.

  வெற்றியொடு போர் முடிந்த பின்பும் சினந்தணியா திருக்கும் அரசனுக்கு மனவமைதியுண்டாதற் பொருட்டு,