பக்கம் எண் :

முன்னுரை11

மலையாளக்  கதகளி  முறையில்,  நகைச்சுவைக்  கூத்து  ஆடிக்காட்டும் வேத்தியற் கூத்தன் சாக்கையன். சமம் - சமன் - சமனி.சமனித்தல் = அமைதிப்படுத்துதல்,   தணித்தல்.   சமனி - சமனிக்கை - சாக்கை.  வள்ளுவனும்  சாக்கையனும் உள்படு கருமத் தலைவர் எனப்படுவர். உள்படுதல் அரசனுக்குத் தனியாக உட்படுதல். அதாவது, என்றும் வேத்தியல் வினையே  செய்தல். அரசனது பள்ளியறை யொழுங்கையும் பாதுகாப்பையுங் கவனிப்பவன் மாளிகைநாயகம் (Chamberlain). அரசனுக்கு அவ் வப்போது இனிய பாட்டு வடிவில் நாழிகை யறிவிப்பவன் நாழிகைக் கணக்கன்.
   
  வைகறையில், அரசனை முன்னோருடன் சேர்த்துப் புகழ்ந்து பள்ளியெழுச்சி பாடுபவர் சூதர், அகவர் என்னும் இரு வகுப்பார். முன்னவர் நின்றேத்துவார், பின்னவர் இருந்தேத்துவார். மற்ற வேளைகளிற் புகழ்ந்து பாடுவார் மங்கலப் பாடகர்.
 
அரசனின் செங்கோல் முறைமை
 
  அரசன் தன் குடிகளைத் தன் மக்களைப்போல் அன்பாக அரவணைத்துக் காத்துவந்தான். காவலன், புரவலன் என்னும் பெயர்கள் இதையுணர்த்தும். அதிகாரிகளாற் கேடுசெய்யப் பட்டு வழக்கிழந்த ஏழையெளியவர் அரசனிடம் நேரில் முறையிடுவதற்கு,  அரண்மனை     வாயிலில்     ஆராய்ச்சிமணி கட்டப்பட்டிருந்தது.  சிக்கலான  வழக்கில்  துப்புக்  காணவும்,  குடிகளின் நலத்தை நேரடியாய் அறியவும்,  அரசன்   இராவேளையில்   மாறுகோலம்   பூண்டு  நகரநோட்டம்  செய்வதுண்டு.  ஒருவழியிலும்  உண்மை  புலனாகாத வழக்கைத் தீர்க்கும்  ஆற்றலை,  இறைவனிடம்   இரந்துவேண்டிப்  பெறுவது  முண்டு. குற்றத்திற் கேற்பத் தண்டஞ் செய்வதில் பகை, நட்பு,  அயல்,  உறவு,  தான் என்னும் ஐந்திறத்தும் ஒத்து, தன் மகனைக் கொன்றும், தன் கை குறைத்தும், தன்னுயிர் போக்கியும் நடுநிலையை முற்றப் பேணினர் முன்னை வேந்தர்.
 நாடு  செழிக்கவும்,  அந்தணர்,  அரசர்,  வணிகர்,  வேளாளர்  என்னும் நால்வகுப்பாரும் தழைக்கவும், இயன்றன வெல்லாஞ் செய்யப்பட்டன.
   
  உலகில் வேறெங்குமில்லாத  மொழிவளர்ச்சியும்  இலக்கண  விலக்கியப் பெருக்கமும் ஏற்பட்டன.
 
  பேரூர்தொறும்  குடவோலை முறையில்  அவை  தேர்ந்  தமைக்கப்பட்டு, குடியரசிற்கு அடிப்படையான உள்ளாட்சிக்கும்