தமிழ்நாட்டு அரசின் தனிக்கடமை | 151 |
ஏதேனுமொரு தலைப்புப் பற்றிக் கட்டுரைப் போட்டி யிடுவித்தல் இன்னொன்று. இவ்விரண்டுள் ஏதேனு மொன்றில் இந்தியார் வென்றுவிடின், இந்தியும் ஆங்கிலத்திற்குச் சமம் என்று கொள்ளலாம். கடன் கொள்வதால் மட்டும் எல்லா மொழிகளும் ஆங்கிலம் போல் வளர்ச்சியடைந்துவிடல் முடியாது. ஆங்கிலர் அறிவு வளர்ச்சியினாலேயே அவர் மொழியும் வளர்ச்சி யடைந்தது. மொழியென்பது உண்மையில் ஓர் இனத்தாரின் கருத்து அல்லது அறிவுத் தொகுதியே. ஒருவர் தம் கருத்தைப் பிறர் அறியுமாறு செவிப்புலனான ஒலி வாயிலாக வெளிப்படுத்து கின்றார். "மொழியப்படுதலின் மொழியாகும்மே". ஒலி வடிவான மொழி தொலைவிலுள்ளார் அறியுமாறு வரி வடிவாக எழுதப்படுகின்றது. எழுத்தென்பது உண்மையில் ஒலியே. எழுதப்படுதலின் எழுத்தாகும்மே. ஒலி ஒருமடி வாயிலும், வரி இருமடி வாயிலுமாகும். ஆங்கிலர் தாம் புதிதாகக் கண்ட அறிவைப் புலப்படுத்த, இலத்தீன் கிரேக்கச் சொற்களைக் கடன் கொள்வது, நெல்லை விளைவித்த உழவன் அதைச் சந்தைக்குக் கொண்டுசெல்ல வண்டியையும், அரிசியைக் கடையில் வாங்கினவன் அதை வீட்டிற்கு எடுத்துச் செல்லப் பையையும், இரவல் வாங்குவது போன்றதே. நெல் விளைவிக்காமலும் அரிசியை விலைக்கு வாங்காமலும் வண்டியையும் பையையும் மட்டும் இரவல் வாங்கிப் பயனில்லை. உள்ளடக்கமே கொள்கலத்திலும் சிறந்தது. தமிழ், இலத்தீன், கிரேக்கம், அரபி முதலிய இலக்கியச் செம்மொழிகளே (Classical languages) தாமே வளர்ச்சியடைய முடியும். மொழிகள் ஏராளமாய்க் கடன் கொள்ளின் வேறு மொழிகளாய் மாறிவிடும். எல்லா மொழிகளும் கடன் கொள்ளலாம். ஆயின், எல்லா மொழிகளும் பெருமை பெறா. 6. இந்தி இலக்கியச் செம்மொழியன்மை இந்தி இலக்கியச் செம்மொழியன்று. அதிலுள்ள இலக்கியம் தமிழர்க்குப் பயன்படுவதன்று. கம்பராமாயணம் வான்மீகி யிராமாயணத்தினுஞ் சிறந்தது. ஆதலால், துளசி தாசர் இராமாயணம் தமிழ்நாட்டிற் செல்லாது. இந்தியில் இருப்புப் பாதை வழிகாட்டி (Railway Guide) தவிர வேறொன்று மில்லை யென்று, அறிஞர் அண்ணாதுரையார் திருச்சிராப் |
|
|