முறை யென்பதை இங்கு இறைவன் ஏற்பாடு அல்லது இயற்கையென்று கொள்க.
உயர்நிலைக் கல்விக்கு வேண்டும் மதிநுட்பம் இல்லா மையால் ஒருவன் உழைப்பாளியாகின்றான். அஃது அவன் தவறன்று. ஆதலால் அவனை இகழக்கூடாது. அவன் தன் உடல்வலிமையால் அஃதில்லாத உயர்கல்வியாளனுக்கு உதவு வதைப் பாராட்டல் வேண்டும்.