யான அளவிறந்த வருமானவரி சுமத்தி அவர் உள்ளந் தளரவும் நெஞ்சம் புண்படவும் செய்தது. அதனால் அவர் தம்மனநோ வின் கடுமையை, தம் புதுப் புனைவுகளையுங் கண்டுபிடிப்பு களையும் வெளிப்படையாகச் சுட்டெரித்துக் காட்டினார்.
இக்காலத்திற் பொன்னும் எண்ணெயும் போன்ற கனியப் பொருள்கள் இல்லா நாடுகளெல்லாம், புதுப்புனைவுகளாலும் கண்டுபிடிப்புகளாலுமே தழைத்தோங்கமுடியும். ஆதலால், அவ்வாற்றலுள்ளாரை வரியும் செல்வ வரம்பும் இடாது அரசு ஊக்குதல் வேண்டும். புதுப்புனைவுகளால் மக்கள் வாழ்க்கை ஏந்தும் (வசதியும்) இன்பமும் பெறுவதால், புதுப்புனைவாளரை யெல்லாம் குலமத கட்சி வேறுபாடின்றி நாட்டுவளம் பெருக் கியவராகவும் உலகப் பொதுநலத் தொண்டராகவும் போற்றுதல் வேண்டும்.
இனி, தன்னலமின்றி மன்னலமே பேணித் தம் பொருளை யெல்லாம் வரையாதீயும் வள்ளல்கட்கும் செல்வவரம்பிருத்தல் கூடாது.