பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்10

5- ஆம் வேற்றுமை உருபுகளாகிய இல், இன் என்பவை மட்டுமன்றி, இப்பொழுது
விட எனும் உருபும் பெருவழக்காயுள்ளது.

* முந்தைய ஆட்சிகளைவிட + சிறப்பாக உள்ளது
  = முந்தைய ஆட்சிகளைவிடச் சிறப்பாக உள்ளது.

பழைய வழக்கு : மன்னராட்சியின் சிறந்தது மக்களாட்சி. இப்பொழுது
மன்னராட்சியைவிடச் சிறந்தது மக்களாட்சி. இமயமலையைவிடத் தாழ்ந்தது
பொதிய மலை.

* புகைப்பதை விடச் சொன்னேன் - என்னும் இடத்தில் "விட" என்பது செய என்னும்
  வாய்பாட்டு வினையெச்சமாக வரும்.

6-ஆம் வேற்றுமைத் தொகை
20

விள+ கோடு = விளக்கோடு (விளத்தினது கோடு)
நீதிமன்றம் > நீதிமன்ற + கிளை = நீதிமன்றக்கிளை
மன்றம் > மன்ற + கூட்டம் = மன்றக்கூட்டம்

* நிலைமொழி உயர்திணையாயின் மிகாது
கம்பன் > கம்ப + சித்திரம் = கம்பசித்திரம்

7-ஆம் வேற்றுமை உ.ப. உடன்தொக்க தொகை
21

ஆங்க + கொண்டான் = ஆங்கக்கொண்டான்
                (இடப் பொருண்மை)