பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்21

இன்னா + சொல் = இன்னாச் சொல்
பயனிலா + சொல் = பயனிலாச் சொல்


3. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் (குறிப்பு - அகரப்பேறு)

இரா + காக்கை = இரா அக் காக்கை (இல்லாத காக்கை)
இரா + கூத்து = இரா அக் கூத்து (இல்லாத கூத்து)

அகரப்பேறு கொடுக்காவிட்டால்

இரா + காக்கை = இராக் காக்கை
இரா + கூத்து = இராக் கூத்து
இரவு நேரத்தில் காணப்படும் காக்கை
இரவு வேளையில் நடத்தப்படும் கூத்து

(அகரப்பேற்றினைக் கொடுத்துப் பொருள் வேறுபாட்டினை உருவாக்கியிருக்கும்
முன்னோரின் புலமையை நோக்குக - தொல். எழுத்து. நூற்பா - 223; நச்.உரை)

வினையெச்சம்
3

1. செய்யா எனும் வாய்பாட்டு வினையெச்சம்
(உடன்பாடு)


உண்ணா + கிடந்தன = உண்ணாக் கிடந்தன (உண்டு எனப் பொருள்படும்)
          கொண்டான் = உண்ணாக் கொண்டான்
உண்ணா + சென்றான் (உண்டு கொண்டான்)
          தந்தான்
          போயினான்

2. செய்யா எனும் வாய்ப்பாட்டு வினையெச்சம்
(எதிர்மறை)

உண்ணா + கிடந்தன + உண்ணாக் கிடந்தன (உண்ணாது எனப் பொருள்படும்)