பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்22

கல்லா + கழித்தான் = கல்லாக் கழித்தான் (கல்லாது எனப்பொருள்தரும்)

2-ஆம் வேற்றுமைத் தொகை / உருபும் பயனும் உடன் தொக்க தொகை
4

நிலா + பாட்டு = நிலாப்பாட்டு
(நிலாவைப் பற்றிய பாட்டு)
கனா + கண்டேன் = கனாக் கண்டேன்
நிலா + பார்த்தான் = நிலாப் பார்த்தான்
விழா + கொண்டாடினர் = விழாக் கொண்டாடினர்
களா + பறித்தான் = களாப் பறித்தான்
சுறா + தின்றான் = சுறாத் தின்றான்
சுறா + பிடித்தான் = சுறாப் பிடித்தான்

3-ஆம் வேற்றுமை உ.ப.உடன் தொக்க தொகை
5

நிலா + துன்பம் = நிலாத் துன்பம் (நிலாவினால் காதலர்களுக்கு உண்டாகும் துன்பம்)
நா+ சுவை = நாச்சுவை (நாவினால் உணரப்படும் சுவை)

4- ஆம் வேற்றுமை உ.ப. உடன் தொக்க தொகை
6

புறா + கூடு = புறாக்கூடு (புறாவிற்கு உரிய கூடு)
சுற்றுலா + பேருந்து = சுற்றுலாப் பேருந்து