பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்29

உரிச்சொல்
7

கடி + கமலம் = கடிக்கமலம்

2-ஆம் வேற்றுமை உ.ப. உடன் தொக்க தொகை
8

புளி + கறி = புளிக்கறி (புளிப்பையுடைய கறி)
வரி + குதிரை = வரிக்குதிரை (வரியை உடைய குதிரை)
எலி + பொறி = எலிப்பொறி (எலியைப் பிடிக்கும் பொறி)
துப்பாக்கி + தொழிற்சாலை = துப்பாக்கித் தொழிற்சாலை
அமைதி + கடல் = அமைதிக் கடல்
          புரட்சி

3- ஆம் வேற்றுமை உ.ப. உடன் தொக்க தொகை
9

துப்பாக்கி + சூடு = துப்பாக்கிச் சூடு
மேழி +செல்வம் = மேழிச்செல்வம் (மேழியால் விளைந்த செல்வம்)
ஒளி + பதிவு = ஒளிப்பதிவு
வெள்ளி + தட்டு = வெள்ளித்தட்டு
பருத்தி + துணி = பருத்தித்துணி
வங்கி + கடன் = வங்கிக்கடன்