பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்3

'என' என்னும் எச்சம்
4

     கொண்டான் = ஆடெனக் கொண்டான்
     சென்றான் (தெரிநிலை வினையெச்சம்)
ஆடென + தந்தான்
      போயினான்

பொள்ளென + பரந்தது= பொள்ளெனப் பரந்தது
சால + பகைத்தது = சாலப் பகைத்தது (குறிப்பு வினையெச்சம்)

     குறிப்பிட்டார்= எனக் குறிப்பிட்டார்
     சொன்னார்
என +
     தெரிவித்தார்
     பாராட்டினார்

பெய்யென + பெய்யும் = பெய்யெனப் பெய்யும்

பண்புத்தொகை / அல்வழி
5

வட்டம் + கல் = வட்டக்கல்

வட்டம் என்னும் சொல்லில் ம் எனும் மெய்யெழுத்துத்தானே இறுதியாக நிற்கின்றது;
இஃது எப்படி அகர இறுதியாகும். புணரும்போது ம் கெட்டு நிற்கின்றது; எஞ்சி
நிற்பதில் அகரம் இறுதியாகின்றது. இலக்கணத்தார் இதனை விதி ஈறு
என்பர்.

சதுரம் > சதுர + பலகை = சதுரப் பலகை
அபயம் > அபய + குரல் = அபயக்குரல்