பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்33

மணி + பவளம் = மணிபவளம்
நரி + பரி = நரிபரி
வெற்றி + தோல்வி = வெற்றிதோல்வி
பசி + பிணி = பசிபிணி*

* பசிப்பிணி என ஒற்று மிகுந்தால் பசியாகிய பிணி எனப் பொருள்படும்.

பஞ்சம் + பசி + பட்டினி = பஞ்சம் பசி பட்டினி

வினைத்தொகை / அல்வழி
18

வெடி + குண்டு = வெடிகுண்டு
அழி + பொருள் = அழிபொருள்
குடி + தண்ணீர் = குடிதண்ணீர்
மழி + தகடு = மழிதகடு

2- ஆம் வேற்றுமைத் தொகை
19

ஆத்தி + சூடி = ஆத்திசூடி
துணி + தைத்தான் = துணி தைத்தான்
கனி + தின்றான் = கனி தின்றான்
எலி + பிடித்தான் = எலி பிடித்தான்
புலி + சுட்டான் = புலி சுட்டான்
     கொன்றான்
ஒலி + பெருக்கி = ஒலி பெருக்கி
மாணடி + சேர்ந்தார்= மாணடி சேர்ந்தார்