பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்39

உ-குற்றியல்
உம்மைத்தொகை / அல்வழி
4

வடக்கு + தெற்கு = வடக்குத்தெற்கு
மேற்கு + கிழக்கு = மேற்குக் கிழக்கு

உ-குற்றியல்
1. பண்புத்தொகை / அல்வழி
5

குருடு > குருட்டு + கோழி = குருட்டுக்கோழி
நேற்று > நேற்றை + பொழுது = நேற்றைப்பொழுது
வெளிறு > வெளிற்று + பனை = வெளிற்றுப் பனை
பண்டு > பண்டை + காலம் = பண்டைக் காலம்
பத்து + பாட்டு = பத்துப் பாட்டு
எட்டு + கோடி = எட்டுக்கோடி
தச்சு + தொழில் = தச்சுத்தொழில்
மக்கு + பையன் = மக்குப்பையன்

எட்டுக்கோவில்கள், எட்டுச் சிறுவர்கள், எட்டுத் தேர்கள், எட்டுப் பொருள்கள் /
பத்துக் காளைகள், பத்துச் சீடர்கள், பத்துத்தூண்கள், பத்துப் புலவர்கள்

2. இருபெயரொட்டுப் பண்புத்தொகை / அல்வழி

கரடு > கரட்டு + கானம் = கரட்டுக் கானம்
குருடு > குருட்டு + கோழி = குருட்டுக்கோழி
திருகு > திருட்டு + புலையன் = திருட்டுப் புலையன்
களிறு > களிற்று + பன்றி = களிற்றுப் பன்றி
எயிறு > எயிற்று + பல் = எயிற்றுப் பல்