பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்42

உ-குற்றியல் 6- ஆம் வேற்றுமைத் தொகை
11

கொக்கு + கால் = கொக்குக் கால் ( வன் தொடர்)
ஆடு > ஆட்டு + கால் = ஆட்டுக்கால் (இரட்டித்தல்)
பாறு > பாற்று + கால் = பாற்றுக்கால் (இரட்டித்தல்)
          - பாறு - பருந்து
வண்டு + கால் = வண்டுக்கால் (மென்தொடர்)
பந்து + திரட்சி = பந்துத் திரட்சி

உ- குற்றியல் 7- ஆம் வேற்றுமை உ.ப.
உடன் தொக்க தொகை
12

ஏடு > ஏட்டு + சுரைக்காய் = ஏட்டுச் சுரைக்காய்
வயிறு > வயிற்று + தீ = வயிற்றுத்தீ
ஆறு > ஆற்று + பாலம் = ஆற்றுப்பாலம்
வீடு > வீட்டு + பயிற்சி = வீட்டுப்பயிற்சி
நாடு > நாட்டு + பற்று + நாட்டுப்பற்று
காடு > காட்டு + தீ = காட்டுத் தீ
குன்றத்து + கூகை = குன்றத்துக்கூகை
           (அத்துச் சாரியை)

உ- குற்றியல் மிகாவிடங்கள்

உ- குற்றியல் அல்வழி - எழுவாய்த்தொடர்
13

     வன்தொடர்களைத் தவிர்த்துப் பிற இடங்களில்
நாகு + கடிது = நாகு கடிது