பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்61

6-ஆம் வேற்றுமை (நிலைமொழி அஃறிணையாயின்)
6

         கோடு = யானைக் கோடு
யானை + செவி
        தலை
        புறம்

தினை + தாள் = தினைத்தாள்
குதிரை + குளம்பு = குதிரைக் குளம்பு
பறவை + கூட்டம் = பறவைக் கூட்டம்
கழுதை + குரல் = கழுதைக் குரல்
சேனை + தலைவன் = சேனைத் தலைவன்

* நிலைமொழி உயர்திணையாயின் வல்லெழுத்து மிகாது.

7-ஆம் வேற்றுமைத் தொகை / உ.ப. உடன்தொக்க தொகை
7

பண்டு > பண்டை + சான்றோர் = பண்டைச் சான்றோர்
அன்று > அற்றை + கூத்தர் = அற்றைக் கூத்தர்
இன்று > இற்றை + கூத்தர் = இற்றைக் கூத்தர்
காலை + காட்சி = காலைக்காட்சி
மாலை + காட்சி = மாலைக்காட்சி
மலை + பாம்பு = மலைப்பாம்பு
மலை + கோட்டை = மலைக்கோட்டை
குகை + புலி = குகைப் புலி
மேடை + தமிழ் = மேடைத்தமிழ்