34. முதல் சொல்லின் இறுதி எழுத்து ஜ் எடுத்துக்காட்டு | தொடரும் சொல், விகுதி | சந்தி | விளக்கம் | காலேஜ்+கள்= காலேஜ்கள் | -கள் | | ‘-கள்’ பன்மை விகுதி | ஃபிரிட்ஜ்+இல்= ஃபிரிட்ஜில் | உயிரெழுத்து | | உயிர்மெய்யாக எழுதப்படுகிறது. | 35. முதல் சொல்லின் இறுதி எழுத்து ஷ் எடுத்துக்காட்டு | தொடரும் சொல், விகுதி | சந்தி | விளக்கம் | பாலிஷ்+கள்=பாலிஷ்கள் | -கள் | | ‘-கள்’ பன்மை விகுதி | தமாஷ்+ஆக=தமாஷாக | உயிரெழுத்து | | உயிர்மெய்யாக எழுதப்படுகிறது. | 36. முதல் சொல்லின் இறுதி எழுத்து ஸ் எடுத்துக்காட்டு | தொடரும் சொல், விகுதி | சந்தி | விளக்கம் | பஸ்+கள்=பஸ்கள் சூட்கேஸ்+கள்= சூட்கேஸ்கள்/சூட்கேசுகள் | -கள் | | ஓரசைச் சொல்லில் உயிரெழுத்து குறிலாக இருந்தால் இறுதியில் உள்ள ‘ஸ்’ ‘சு’வாக எழுதப்படுவதில்லை. பல அசைகள் கொண்ட சொல்லில் ‘சு’வாகவும் எழுதப்படுகிறது. | பர்ஸ்+இல்=பர்ஸில்/பர்சில் போலீஸ்+இடம்= போலீஸிடம்/போலீசிடம் | உயிரெழுத்து | உயிர் மெய்யாக எழுதப் படுகிறது | ‘ஸ்’, ‘ச்’ என்று ஆகி உயிரெழுத்தை ஏற்கிறது. | பஸ்+ஐ=பஸ்ஸை/பஸ்சை பஸ்+இல்=பஸ்ஸில்/பஸ்சில் | உயிரெழுத்து | இரட்டித்துவரும் | ‘ஸ்’, ‘ச்’ என எழுதப்படுகிறது; ‘பஸ்ஸை’, ‘பஸ்ஸில்’ என எழுதுவது மிகுதி. | |