பக்கம் எண் :

104

     மேற்காட்டிய எடுத்துக்காட்டு பேச்சு நடையில் இருப்பதால் அதற்குப் பொருத்தமாக
‘கொஞ்ச நாளைக்கு’ என்று இருக்கலாம்; ‘சில வாரத்துக்கு’ என்பது இங்கு பொருத்தமாக
இருக்காது.
 
(4) காட்டுக்குச் சென்று தவம்செய்ய ஆரம்பித்தார்:
அவர் செய்த கொடிய தவத்தைப் பார்த்து இந்திரன் நடுங்கினான்.
 
     ‘கொடிய’ அல்லது ‘கொடும்’ என்பதும் ‘கடும்’ என்பதும் ஒரு பொருளைத் தரக்கூடிய
முறையில் பயன்படுத்தப்படலாம். ஆனால், மேற்காட்டிய எடுத்துக்காட்டில் ‘கொடிய தவம்’
என்பது ‘கொடூரமான தவம்’ என்ற பொருளைத் தருகிறது. கடும் தவம் ‘கொடூரமாக’
இருக்காது. எனவே, ‘கடும்’ என்பதே இங்கு பொருந்தக்கூடிய சொல்.
 
  (5) ‘அவருடைய இரண்டு கைகளும் ஊனம்’ என்று குறிப்பிட்டிருப்பது தவறான செய்தியாகும். அவருக்கு இரண்டு கைகளும் சிறப்பாகவே இருந்தன.
 
     ‘சிறப்பாக’ என்பதும் ‘நன்றாக’ என்பதும் சில இடங்களில் பொருள் வேறுபாடு
இல்லாமல் (எ-டு ‘விழா சிறப்பாக/நன்றாக நடைபெற்றது’? பயன்படுத்தப்பட்டாலும் ‘நன்றாக’
வரும் எல்லா இடங்களிலும் ‘சிறப்பாக’ என்பதைப் பயன்படுத்திவிட முடியாது என்பதற்கு
இது சான்று. இதில் கைகள் சீராகவே இருந்தன என்பதைத் தெரிவிக்க ‘நன்றாகவே’ என்னும்
சொல்தான் பொருத்தமானது.
  (6) படுக்கையை விட்டு எழுந்த அவன் லுங்கியைச்
சரியாக இடுப்பில் அமைத்துக்கொண்டான்.

     ‘அமை’ என்னும் வினைச்சொல் ‘உருவாக்கு’, ‘ஏற்படுத்து’, ‘இணை’, ‘கட்டு’ முதலிய
பல வினைச்சொற்களின் பொருளை உள்ளடக்கியிருக்கிறது. ஆயினும், சில இடங்களில்
பொதுவான வினைச்சொல்லான ‘அமை’ என்பதைவிடக் குறிப்பான வினைச்சொல்லே
பொருத்தமாக இருக்கும். மேலே உள்ள எடுத்துக்காட்டில் ‘அமை’ பொருத்தமாக இல்லை;
‘கட்டு’ என்னும் வினைச்சொல்லே ஏற்கத் தகுந்தது.
 
1.1.3 சொல்லின் தொனிப்பொருள்
 
     ஒரு மொழியை நன்கு அறிந்தவர்களுக்கு அந்த மொழியிலுள்ள சொற்களும்
தொடர்களும் பொருளை உணர்த்துவதோடு நின்றுவிடுவதில்லை; அவர்கள் மனதில்
பொருளோடு நிழலாடும் சில சாயல்களையும் உணர்த்துகின்றன. சொற்களின் பொருளோடு
இழையும் இந்தத் தொனிப்புகளும் பொருளைப் போன்றே மிக முக்கிய