2.1.3 தவிர |
| |
‘தவிர’ என்பது ‘குறிப்பிட்ட ஒன்று/ஒருவர் நீங்கலாக’ என்று பொருள் தரும். மற்றவர்களிடமிருந்து ஒருவரை நீக்கிக் கூறுவதற்குப் பயன்படுத்தும் ‘தவிர’ என்பதை மற்றவர்களோடு சேர்த்துக் கூறுவதற்குப் பயன்படுத்தும்போது வாக்கியத்தில் வேறு இடைச்சொல்லும் தேவைப்படுகிறது. |
|
| (34) அஜாருதீன் முதன்முதலில் ரிச்சர்ட்ஸின் பந்துக்குப் பலியானார். .... அஜாருதீன் தவிர அமர்நாத், சாஸ்திரி, கபில்தேவ் - ஆகியோர் ரிச்சர்ட்ஸ் பந்து வீச்சில் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். |
அஜாருதீன், ரிச்சர்ட்ஸ் பந்து வீச்சால் ஆட்டம் இழந்தது போலவே ஏனையோரும் ஆட்டம் இழந்தனர் என்ற கருத்தில் கூறப்பட்டிருக்கும் இந்த வாக்கியத்தில் ‘...தவிர...ஆகியோர்’ என்ற அமைப்பு தவறான பொருளைத் தருகிறது. ‘ஆகியோரும்’ என்றிருந்தால்தான் கூறவந்த செய்தி சரியாக உணர்த்தப்படும். ‘தவிர...-உம்’ என்பதே மற்றவர்களோடு ஒருவரை உட்படுத்தும் அமைப்பாகும். |
2.1.4 எந்த, எல்லாம் |
அதிகப் புழக்கத்திலிருக்கும் இந்தச் சொற்களும் சில இடங்களில் பொருள் தெளிவில்லாமல் பயன்படுத்தப்பட்டுவிடுகின்றன. |
|
| (35) எந்தப் பொருட்களுக்கும் அதற்கேற்றாற் போல் விளம்பர மாடலைத்தான் விரும்புவார்கள். (36) நான் இந்த வீட்லயே எந்தப் பிரச்சினைகளையும் சுமுகமாகத் தீர்த்துக்கிட்டு... |
‘எந்த’ என்பதன் பின் வரும் பெயர்ச்சொல் பன்மையில் இருப்பதில்லை. ‘எந்தப் பொருளுக்கும்’ என்று முதல் எடுத்துக்காட்டிலும் ‘எந்தப் பிரச்சினையையும்’ என்று இரண்டாவது எடுத்துக்காட்டிலும் இருக்க வேண்டும். ‘எல்லாம்’ என்ற சொல், பலவற்றைக் குறிக்கும் சொல்லின் பின்னும் ஒன்றைக் குறிக்கும் சொல்லின் பின்னும் வரும். மேலும், ‘எல்லாம்’ வரும்போது வேற்றுமை உருபு சேர்ப்பதில் கவனம் தேவை. |
| (37) உன்னால்தானே நாங்கள் இது எல்லாவற்றையும் சகிக்க வேண்டிவந்தது. |