| (49) தோரணங்கள் கட்டி, ஷாமியானா அமைத்து, ஏராளமான நாற்காலிகள் போடப்பட்டு, ஓரமாக நிறைய கூல்ட்ரிங் பாட்டில்கள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும். | | இந்த வாக்கியத்தில் முதல் இரு வினையெச்சங்கள் (கட்டி, அமைத்து) செயப்பாட்டு வினையில் இல்லை; மூன்றாவது வினையெச்சம் (போடப்பட்டு) செயப்பாட்டுவினையில் உள்ளது. இவை மூன்றும் ‘அடுக்கிவைக்கப்பட்டிருக்கும்’ என்ற செயப்பாட்டு வினைமுற்றைக் கொண்டு முடிவதாகக் காட்டப்பட்டிருக்கிறது. இந்த முடிவு ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. இந்த வாக்கியம் சில முறைகளில் மாற்றி அமைப்பதற்கு இடம் தருகிறது. அவற்றுள் ஒரு முறையாகப் பின்வருவதைக் காட்டலாம். | | ஷாமியானா அமைத்து, தோரணங்கள் கட்டி ஏராளமான நாற்காலிகள் போடப்பட்டிருக்கும்; ஓரமாக நிறைய கூல்ட்ரிங் பாட்டில்கள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும். | | |
|
|