glucose, car ஆகியவை தமிழ் எழுத்துக்களில் முறையே குளுக்கோஸ், கார் என்று எழுத்துப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. பயன்பாட்டிற்கு வந்துவிட்ட பிற மொழிச் சொற்களை ஒரு மொழியினர் தம் உச்சரிப்பு முறைக்கு ஏற்பத் தம் மொழியின் வரிவடிவத்தில் எழுத்துப்பெயர்ப்பு செய்து கொள்கின்றனர். எடுத்துக்காட்டாக, parliament என்ற ஆங்கிலச் சொல்லைத் தமிழில் பார்லிமென்ட் என்று எழுதியிருப்பது நமது உச்சரிப்பை அடிப்படையாகக் கொண்டது. (ஆங்கிலத்தில் r என்பது உச்சரிக்கப்படுவதில்லை; தமிழில் உச்சரிக்கப்படுகிறது.) சில ஆங்கிலச் சொற்களை உச்சரிப்பதுபோல் அல்லாமல் தமிழ் முறைப்படி எழுதுவதுண்டு. எடுத்துக்காட்டாக, Clinton என்பதை ‘க்ளின்டன்’ என்று உச்சரித்தாலும் ‘கிளிண்டன்’ என்று தமிழ் முறைப்படி எழுதுகிறோம். இதுபோல் clover என்பதை ‘க்ளாவர்’ என்று உச்சரித்தாலும் ‘கிளாவர்’ என்று எழுதுகிறோம். | 2. எழுத்துப்பெயர்ப்பின் தேவை | | புதுச் சொல்லாக்கம், மொழிபெயர்ப்பு ஆகிய முறைகளால் பிற மொழிச் சொல்லை எதிர்கொள்ள முடியாதபோது இடைக்கால ஏற்பாடாக எழுத்துப்பெயர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது. புதுச்சொற்கள் உருவாக்கப்பட்டு அவை புழக்கத்தில் வரும்போது எழுத்துப்பெயர்ப்புச் சொற்கள் மெல்லமெல்ல மறைந்துவிடும். (கம்ப்யூட்டர் என்பதற்குக் கணிப்பொறி, கணினி என்ற சொற்கள் இன்று வழக்கிற்கு வந்துவிட்டன.) எனினும் எழுத்துப்பெயர்ப்புக்கு உள்ளாகும் சொற்களில் பலவும் ஆள், இடம், கருவி முதலியவற்றைக் குறிப்பதால் எழுத்துப்பெயர்ப்பு தவிர்க்க இயலாததாகிறது (எ-டு கார்ல்மார்க்ஸ் -Karl Marx, லெனின்கிராடு - Leningrad, ஸ்டெத்தாஸ்கோப் - stethoscope லேசர்- Laser). . மேலும், கடைகளின் பெயர்ப்பலகைகளிலும் பொருள்களின் விளம்பரங்களிலும் ஆங்கிலச் சொற்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைத் தமிழ் எழுத்துக்களில் எழுத வேண்டியிருப்பது இன்றைய தேவையாகிறது. Jewellery Mart. Gift Corner. Bombay Dyeing, Lux போன்றவைகளை எழுத்துப்பெயர்ப்பு செய்ய வேண்டியதன் அவசியத்தை வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். எனவேதான், எழுத்துப்பெயர்ப்பைத் தவிர்க்க இயலாது என்று கூற வேண்டியுள்ளது. எழுத்துப்பெயர்ப்புக்கு இரு மொழிகளின் ஒலிப்பு முறை மற்றும் எழுத்து அமைப்பு பற்றித் தெரிந்திருக்க வேண்டும். இதற்கு முன்பு சமஸ்கிருத, பாலி, பிராகிருத மொழிச் சொற்கள் சில விதிகளைப் பின்பற்றித் தமிழில் எழுத்துப்பெயர்ப்பு செய்யப்பட்டன. இப்பணியில் ஈடுபட்டோருக்கு இம்மொழிகளின் அறிவு இருந்தது. ஐரோப்பியர் | | |
|
|