பக்கம் எண் :

121

வருகையை ஒட்டி ஐரோப்பிய மொழிச் சொற்கள் பல இன்று தமிழில் எழுத்துப்
பெயர்ப்புக்கு உள்ளாகின்றன. எபிரேய (Hebrew) மொழியிலிருந்து பைபிளைத் தமிழில்
மொழிபெயர்த்த தொடக்க காலத்தில் Daniel, John, Peter என்ற பெயர்கள் முறையே
தானியேல், யோவான், பேதுரு என இம்மொழிகளுக்கிடையேயான ஒலிப்பு முறை, எழுத்து
அமைப்புக்கு ஏற்ப எழுதப்பட்டன. இவையே இன்று ஆங்கிலம் வழியாக
எழுத்துப்பெயர்ப்புக்கு உள்ளாகும்போது டேனியல், ஜான், பீட்டர் என எழுதப்படுகின்றன.
மூல மொழியாக எது உள்ளது. அதன் ஒலிப்பு முறையும் எழுத்து அமைப்பும் எவ்வாறு
உள்ளன என்பவற்றைக் கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப எழுத்துப்பெயர்ப்பு
மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தமிழில் பெரும்பாலும் பிற மொழிச் சொற்கள் ஆங்கிலம்
வழியாகவே எழுத்துப்பெயர்ப்பு செய்யப்படுகின்றன. பிரெஞ்சு, ரஷ்யன் போன்ற
மொழிகளிலிருந்து நேரடியாக எழுத்துப்பெயர்ப்பு நடைபெறுவது சிறிய அளவிலேயே
உள்ளது. எனவே, பின்னே தரப்பட்டிருக்கிற அட்டவணையும் குறிப்பும் ஆங்கிலம்-தமிழ்
ஒலிப்பு முறை, எழுத்து அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைகின்றன.
 
3. எழுத்துப்பெயர்ப்பில் கவனிக்க வேண்டியவை
 
     ஆங்கிலத்திலுள்ள b/p,g/k,d/t வேறுபாடு தமிழ் எழுத்து அமைப்பில் இல்லை
(ஆனால், ஒலிப்பு முறையில் உள்ளது; கம்பி - Kambi| பையன் - Paiyan, தங்கை -
tangai| கப்பல் - Kappal, பந்து - pandu/திருப்பு - tiruppu), எனவே, தனி எழுத்துக்கள்
தேவைப்படவில்லை. இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், ஆங்கிலத்தில் உள்ள
சில சொற்களின் எழுத்துக்கள் ஒலிக்கப்படாமல் இருக்கும் (pneumonia - நிமோனியா,
robot - ரோபோ), எழுத்துப்பெயர்ப்பு செய்யும்போது இதையும் கவனத்தில் கொள்ள
வேண்டும். மொழிப்பயிற்சியும் அகராதியும் இவற்றை அறிந்துகொள்ள உதவும்.

     ஒலிப்பு முறைக்கும் எழுத்து அமைப்புக்கும் இடையே காணப்படும் ஒற்றுமை,
வேற்றுமை முதலியவற்றைக் கருத்தில் கொண்டு அட்டவணை தயாரிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது வழக்கில் உள்ள ஆங்கிலத்தின் வழியாக எழுத்துப்பெயர்ப்பைச் சரிபார்க்கவும்
புதிதாக எழுத்துப்பெயர்ப்பு செய்வதற்கும் அட்டவணை உதவியாக இருப்பதோடு
எழுத்துப்பெயர்ப்பின் ஒழுங்கிற்கும் உதவும், முன்பே எழுத்துப்பெயர்ப்பு செய்யப்பட்டுப் பல
ஆண்டுகளாகப் புழக்கத்தில் இருந்துவரும் சொற்களை மாற்ற வேண்டியதில்லை.
எடுத்துக்காட்டாக, பொத்தான் (button), உயில் (will), எகிப்து (Egypt) ஆகியவை தமிழ்ச்
சொற்கள் போலவே ஒலிக்கக் காணலாம்.

     சில இடப்பெயர்களையும் நாட்டுப்பெயர்களையும் தமிழ் முறைப்படி எழுதுவதோடு
மட்டுமல்லாமல் அவை ஆங்கிலத்தில் எழுதப்படுவதை ஒட்டி எழுத்துப்பெயர்ப்பு செய்து
வழங்குவதும் உண்டு. கேரளா(Kerala), கர்நாடகா (Karnataka), உத்திர பிரதேஷ்