பக்கம் எண் :

122

(Uttara Pradesh) என்பவை இவ்வாறு வழங்குகின்றன. இவற்றைக் கேரளம், கர்நாடகம், உத்திரப்
பிரதேசம் என்று தமிழ் முறைப்படியும் வழங்குகிறோம்.

     இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் எழுத்துப்பெயர்ப்பு முறைக்கும் நமது
முறைக்கும் சிறிது வேறுபாடு உண்டு. (சான்றாக, metre, தமிழ்நாட்டில் ‘மீட்டர்’,
இலங்கையில் ‘மீற்றர்’; இந்த வேறுபாடு குறித்து இங்கு எதுவும் கூறவில்லை.) தமிழைப்
பயன்படுத்தும் சிங்கப்பூர், மலேசியா முதலிய நாடுகளிலும் எழுத்துப்பெயர்ப்பு
மேற்கொள்ளப்படுகிறது. இவற்றையெல்லாம் ஒருசேரவைத்து அனைத்து நாட்டுத் தமிழ்
எழுத்துப் பெயர்ப்பு முறை (International Tamil transliteration system) ஒன்றை
உருவாக்க இங்கு தரப்பட்டுள்ள அட்டவணையும் குறிப்பும் துணைபுரியும்.