பக்கம் எண் :

123

4. அட்டவணை


அட்டவணையில் ஒரு ரோமன் எழுத்துக்கு நிகராக ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ்
எழுத்துக்கள் தரப்பட்டிருக்கலாம். இதற்குக் காரணம் ஆங்கிலச் சொல்லில் ஒரு எழுத்தின்
முன்னும் பின்னும் வரும் பிற எழுத்துக்களே. அட்டவணையை அடுத்து வரும் குறிப்புகள்
இவற்றுள் சிலவற்றைத் தெளிவுபடுத்தும்.
 

எண் ரோமன் எழுத்து தமிழ் எழுத்து எடுத்துக்காட்டு
1 a அ,ஆ,ஏ Angola: அங்கோலா, anti-biotic: ஆன்டிபயாடிக், acre:ஏக்கர், scan:ஸ்கேன
2 b ப் bicasules:பிகாசூல்ஸ், cable:கேபிள், byte:பைட்
3 c ச், க cylinder:சிலிண்டர், Cinchona:சின்கோனா, courier:கூரியர், technic:டெக்னிக்
4 ch க், ச், ஷ் mechanic:மெக்கானிக், China:சீனா, machine:மெஷின
5 d ட்,த் dollar:டாலர், Denmark:டென்மார்க், Danya:தான்யா,
Muzaffarabad:முஷாஃபராபாத் ward:வார்டு
6 e இ,ஈ,எ,ஏEmmanuel:இமானுவேல், Easter:ஈஸ்டர், Ecuador:ஈக்வடார், Edinburg:எடின்பர்க், Eve:ஏவாள்
7 f ஃப் Fahrenheit:ஃபாரன்ஹீட், finance:ஃபைனான்ஸ், Rudolff Dieself:ரூடோல்ஃப் டீசல் (French என்பது பிரெஞ்சு என்று மரபாக எழுதப்படுகிறது.)
 
8 g ஜ், க் general;ஜெனரல், Guinea;கினியா, Fisk Green;ஃபிஷ் கிரீன்
9 h ஹ் Holand:ஹாலந்து, Hahnemann:ஹானிமன்
10 i அ,இ,ஈ,ஐ iodine:அயோடின், insulin:இன்சுலின், Iran:ஈரான், ice cream:ஐஸ் கிரீம்
11 j ஜ்,ய்/ஏ James Bond:ஜேம்ஸ் பாண்ட், Jacobson:யாகோப்சன், Jesus:ஏசு/யேசு
12 k  க்  Kenya:கென்யா, Park Avenue:பார்க் அவின்யூ, Kremlin:கிரெம்ளின்