பக்கம் எண் :

129

பதிப்புரை
 
     சூத்திரம் முதல் இச்சூத்திரம் ஈறாகப் பகாப்பதம், பகுபதம் எனப் பல்காற் கூறுதல்
தன் குறி வழக்கம் மிக எடுத்து உரைத்தல் என்னும் உத்தி.’ (நன். 137) என்றும், “முன்னைத்
தமிழ்நூல்களுள் இல்லனவற்றை இவ்வாசிரியர் தாமே பகாப்பதம். பகுபதம் என முன்னர்
நாட்டி, இச்சூத்திரங்காறும் அவற்றிற்கு இலக்கணம் தந்து நிறுத்தமையின் தாஅன் நாட்டித்
தனாது நிறுப்பு என்னும் மதம்.” (நன். 145) என்றும் இதனை விளக்குவார். “நன்னூலார்
பதவியல் கூறியதற்கு முதனூல் வடநூல் ஆகலின் அது தோன்ற, மொழியியல் என்னாது
பதவியல் என வடசொல்லான் அதற்குப் பெயரிட்டு, அவ்வோத்துள் வடவெழுத்துத் தமிழில்
வருமாறும் கூறினார்.” (இல. சூறா பக். 100) என்று சிவஞான முனிவரும் இக்கருத்தை
வலியுறுத்துவார். இவர்களுக்கு முன்பே சுப்பிரமணிய தீக்கிதர் செயப்படு பொருளை
நன்னூலார், “ஆக்கல், அழித்தல், அடைதல் முதலாகச் சைநேந்திரன் மதம் பற்றிப் பல
ஆக்குவார்.” (பி. வி. 12 உரை) என்றும் பண்புத்தொகையை. “வாமனன் சிநேந்திரன் செய்த
சத்தநூல் பற்றி அவ்வாறு கூறுவர்.” (பி. வி. 49 உரை) என்றும், “பழையன கழிதலும்
புதியன புகுதலும்” (நன். 462) என்னும் சூத்திரத்தைப், “பாணினி கூறியவாறு கூறினார்.”
(பி.வி. 50 உரை) என்றும் இதே கருத்தைச் சுட்டிக்காட்டினார். இவற்றால் பவணந்தி முனிவர்
வடமொழிப் புலமையும் வியாகரணப் பயிற்சியும் உடையவர் என்பது விளங்கும்.

     நன்னூல் மூலத்தைத் தவிரப் பவணந்தியின் வரலாற்றை அறிய உதவும் சான்றுகள்
இரண்டு. ஒன்று நன்னூலின் சிறப்புப் பாயிரம். இதனை இயற்றியவர் யார் என்று சொல்ல
முடியவில்லை. இரண்டாவது கல்வெட்டுச் சான்றுகள். இவற்றை ஆதாரமாகக் கொண்டு
அவருடைய வரலாற்றைப் பலர்6 விரிவாக எழுதியுள்ளனர். அவர் சமணர்; துறவி பவணந்தி
முனிவர் என்னும் அவரது பெயரே இவற்றுக்குச் சான்று. அன்றியும், “பவணந்தி என்னும்
நாமத் திருந்தவத் தோனே” என்று அவரைச் சிறப்புப் பாயிரம் குறிக்கிறது. பூமலி
அசோகின் புனைநிழல் அமர்ந்த நான்முகனுக்கும் (நன். 56) முச்சகம் நிழற்றும் முழுமதி
முக்குடை அச்சுதனுக்கும் (நன் 258) தமது நூலில் அவர் இறைவணக்கம் கூறுவதாலும்
இச்செய்திள் உறுதிப்படும். இதற்கு மாறாக, ஆதாரம் எதுவும் இல்லாமல் பவணந்தி
முனிவரை அந்தணர் என்று7 கூறுவது இலக்கிய வரலாற்றுக்கு முற்றிலும் புறம்பானது.

     ‘உ. வே. சாமிநாதையர், நன்னூல் மூலமும் மயிலைநாதர் உரையும், சென்னை, 1918.
பக் VII - XII: நன்னூல் மூலமும் சங்கர நமச்சிவாயர் உரையும், சென்னை, 1925 பக் 9-13;
எஸ். வையாபுரிப் பிள்ளை, தமிழ்ச் சுடர்மணிகள், சென்னை, 1968. பக். 181-185; மு.
அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, திருச்சிற்றம்பலம், 1970,
பக். 155-171.

     7சடகோப ராமாநுஜாசாரியரும் பிறரும், நன்னூற் காண்டிகையுரை, சென்னை, 1903.
பக்.1.