| பிறை அடைப்புக்குறிப்புக்கு எடுத்துக்காட்டு | ‘கொன்முனை’ (அச்சுறுத்தும் போர்களம்), ‘கொன்னே கழிந்தன்று, (வீணாகக் கழிந்தது), ‘கொன்வரல் வாடை’ (உரிய காலத்தில் வந்த வாடை), ‘கொன்னூர்’ (முழுஊர் -ஊர் முழுவதும் என்ற சங்க இலக்கிய வழக்குகளை எடுத்துக்காட்டி குமாரசாமிராஜா (1972 : 238) ‘பெயருக்கோ, வினைக்கோ அடையாய் அமைந்திருக்க, அதனை இடைச்சொல் என்று கருதுவது எவ்வாறு பொருந்தும் எனத் தோன்றவில்லை’ என்று கூறியுள்ளார். இங்கு ‘காலமுன்’ வருகிறது. இடைச் சொல்லா? இல்லையா என்ற பிரச்சனையைக் கிளப்பாமல் அதன் சொல்வகைப்பாடு பற்றியே கவலைப்பட்டுள்ளார் என உணரலாம். ‘கொன்’ என்பது வேற்றுமை உருபு ஏற்று - வராததால் பெயர்ச்சொல்லாகக் கொள்ள முடியாது என்று இசரயேலுக்கு எதிர்வாதமாகக் குறிப்பிடலாம். அப்படியே காலவிகுதி ஏற்காததால் வினைச்சொல் என்றும் கொள்ளமுடியாது. அதனால்தான் குமாரசாமிராஜா ‘அடை’ என்று குறிப்பிட்டார் எனலாம். ‘அடை’ என்று கொண்டால் அது உரிச்சொல் என்று ஆகும். உரிச்சொற்களில் வெறும் அடையாக மட்டும் வருபவை வேறு எந்த விகுதியும் ஏற்காதவை ‘உரிச்சொல்’ என்ற சொல் வகைப்பாட்டுக்கு உரியவையாக முன்னரே வரையறுக்கப்பட்டுள்ளது. (சண்முகம், 1986:173) ஆனால் ‘கொன்’ என்பது ஏகார இடைச்சொல்லை ஏற்று வந்திருப்பதை ராஜா காட்டிய உதாரணத்தால் அறியலாம், - உம் என்ற இன்னொரு இடைச்சொல்லையும் ஏற்ற வழக்கு சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. கொன்னும் சாதல் வெய்யோற்கு (வறிதே சாக விரும்புபவர்க்கு) - புறம் 291.6. கொன்னும் சிவப்போள் - (அகம் 60:12) வி.ஐ. சுப்பிரமணியம் (1962 : iv) எந்த ஒட்டுகளையும் ஏற்காதது உரிச்சொல் என்று கூறியதை ஒட்டி வேற்றுமை, காலவிகுதிகளை ஏற்காமல் பிற ஓட்டுகளை ஏற்பவை இடைச்சொற்கள் என்று கொண்டு கொன் என்பதை அடிச்சொல்லாக வரும் இடைச்சொல் எனக் கொள்ளலாம். சங்க இலக்கிய வழக்குகள் அடிப்படையில் கொன் என்பதன் பகிர்வு கீழ்க்கண்டபடி அமைந்துள்ளது. ஏ, உம் ஆகிய இரண்டு | | |
|
|