1.1.1. மாதிரிப் படிவங்களிலிருந்து அறிந்துகொள்ள வேண்டிய செய்திகள் சில உண்டு. முதலில், பிறை அடைப்புக்குறிப்பு பயன்பட்டிருக்கும் முறையைப் பார்க்கலாம். தன் கருத்துக்கு ஆதாரமாக இருக்கும் பகுதிக்குரிய நூலாசிரியரின் பெயர், நூல் வெளியான ஆண்டு, அந்தப் பகுதி இடம்பெற்றிருக்கும் பக்க எண் ஆகிய மூன்று மட்டுமே பிறை அடைப்பிற்குள் இடம்பெறும். எ-டு (சண்முகம், 1986 ; 173). ஆதாரமாகக் காட்டிய ஆசிரியர் பெயரைப் பிறை அடைப்புக்கு வெளியே குறிப்பிட்டுவிட்டால் அடைப்பிற்குள் இடம பெறுவது ஆண்டும் பக்க எண்ணும் மட்டுமே. அடிக்குறிப்பிலும் இறுதிக்குறிப்பிலும் தலைப்பு எழுத்தின் பின் ஆசிரியர் பெயர் தரப்படுகிறது. எ-டு (எஸ். வையாபுரிப் பிள்ளை). பிறை அடைப்பிற்குள் ஆசிரியர் பெயர் தலைப்பு எழுத்து இல்லாமல் தரப்படுகிறது. எ-டு (சண்முகம், 1986 : 173). துணை நூற்பட்டியலில் ஆசிரியர் பெயரை அடுத்து தலைப்பு எழுத்து தரப்படுகிறது. எ-டு (அழகிரிசாமி கு.) ஆதாரமாகக் காட்டிய நூலைப் பற்றிய விவரம் பிறை அடைப்பிற்குள் தரப்பட்டிருப்பதைவிட அடிக்குறிப்பிலும் இறுதிக்குறிப்பிலும் கூடுதலாக இருக்க வாய்ப்பு உண்டு. எனினும், முழுமையான விவரங்கள் இவற்றில் தரப்படுவது தவிர்க்கப்பட்டுத் துணைநூற்பட்டியலிலேயே தரப்படுகின்றன. 1.2 துணைநூற்பட்டியல் என்னும் தொடரை நாம் இங்கு பயன்படுத்தியிருந்தாலும் இதற்கு இணையாக உசாத்துணை நூல்கள், நோக்கு நூல்கள், ஆதார நூல்கள், பார்வை நூல்கள், கருவி நூல்கள் முதலியவை சிலரால் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுள் துணைநூற்பட்டியல், உசாத்துணை நூல்கள், நோக்கு நூல்கள், ஆதார நூல்கள், பார்வை நூல்கள் ஆகியவை ஒரு முறையிலும் கருவி நூல்கள் என்பது வேறொரு முறையிலும் பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது. ஒருவர் தன் எழுத்தில் மேற்கோளாகவும் சான்றாகவும் காட்டிய நூல்களை மட்டுமல்லாமல் தொடர்புடைய பிற நூல்களையும் கட்டுரைகளையும் பட்டியலில் சேர்த்துத் தருவதைத் துணைநூற்பட்டியல், உசாத்துணை நூல்கள் முதலியவை குறிப்பதாகக் கொள்ளலாம். இவ்வாறு இல்லாமல், ஒருவர் தான் சான்றாகக் காட்டிய நூல்களை/ கட்டுரைகளை மட்டும் பட்டியலில் தருவதைக் கருவி நூல்கள் குறிப்பதாகக் கொள்ளலாம். துணைநூற்பட்டியல் என்னும் தொடரை நாம் இங்கு தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தியிருப்பதற்குக் காரணம் அதன் பொருள் தெளிவாக இருப்பதும் அது பரவலாகப் பயன்படுத்தப்படுவதுமே. 1.3 துணைநூற்பட்டியலில் நூல் குறித்த தகவல் தரும்போது குறைந்தது ஐந்து செய்திகளாவது இடம்பெற வேண்டும். அவை; ஆசிரியர் பெயர், வெளியான ஆண்டு, நூலின் | | |
|
|