பக்கம் எண் :

134

அல்லது கட்டுரையின் தலைப்பு, வெளிவந்த இடம், வெளியிட்டவர்/வெளியிட்ட
நிறுவனம். இவை தற்காலத்தில் வெளிவரும் நூல்களுக்குப் பொருந்தும். பழைய இலக்கண,
இலக்கிய நூல்கள் சிலவற்றுக்கு ஆசிரியர் பெயர் இல்லாமல் இருக்கலாம்; வேறு கூடுதல்
செய்திகளான உரையாசிரியர், பதிப்பாசிரியர் முதலியவற்றைத் தரவேண்டியிருக்கலாம்.

1.3.1 துணைநூற்பட்டியலில் பொதுவாக ஆசிரியர் பெயர் அகரவரிசைக்கு எடுத்துக்
கொள்ளப்படுகிறது. ஆனால், பழைய இலக்கிய, இலக்கண நூல்களைப் பொருத்தவரை
அவற்றின் தலைப்புகளையே அகரவரிசைக்கு எடுத்துக்கொள்வது வழக்கமாக இருக்கிறது.
இருப்பினும், ஆசிரியர் பெயரை விட்டுவிடாமல் அடைப்புக்குறிக்குள் தரும் முறையை
இங்கே பின்பற்றியிருக்கிறோம்.

     பழைய இலக்கிய, இலக்கண நூல்களை உரையோடு பதிப்பித்திருந்தால் அந்தத்
தகவல்களையும் தர வேண்டியது அவசியம். உரையாசிரியரின் பெயரைத் தலைப்பை
அடுத்தும் பதிப்பித்தவரின் பெயரை ஆண்டை அடுத்தும் தரலாம்.

1.3.2 துணைநூற்பட்டியலில் மேலே காட்டிய செய்திகளைக் கையால் எழுதுவதாக
இருந்தாலும் தட்டச்சுசெய்வதாக இருந்தாலும் அச்சிடுவதாக இருந்தாலும் அவற்றை
வேறுபடுத்தித் தெளிவாக அறிந்துகொள்ளும் வகையில் காட்டுவது வழக்கமாக இருக்கிறது.
எடுத்துக்காட்டாக, நூல் பெயரைக் கையெழுத்திலோ தட்டச்சிலோ அடிக்கோடிட்டுக்
காட்டலாம்; அதையே அச்சில் தடித்த எழுத்தில் தரலாம். இவ்வாறு வேறுபடுத்திக் காட்டப்
பல முறைகளைக் கையாளலாம். ஆனால், இங்கு நாம் பின்பற்றியிருக்கிற முறையைத்
துணைநூற்பட்டியலின் எடுத்துக்காட்டுகள் வழியாக அறிந்துகொள்ளலாம்.

2. கையாள வேண்டிய முறைகள்

2.0 பிற மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள், நூல்கள் முதலியவற்றைத்
தமிழ்த் துணைநூற்பட்டியலை அடுத்து அவை எழுதப்பட்டிருக்கும் வரிவடிவங்களின்
அடிப்படையில் பிரித்துத் தர வேண்டும்.

2.1 மேற்கோளாகக் காட்டப்படும் பகுதி அல்லது வரி மூல நூலில் எவ்வாறு
உள்ளதோ அவ்வாறே தரப்பட வேண்டும். அவ்வாறு தர முடியாத நிலையில்
(எடுத்துக்காட்டாக, ணா, ணோ, ணை போன்றவற்றின் பழைய வரிவடிவத்தை அவ்வாறே
அச்சிட முடியாத நிலையில்) மாற்றங்கள் செய்துகொள்ளலாம். எழுத்துக்கூட்டு (spelling),
சந்தி, நிறுத்தக்குறிகள் முதலியவை மூல நூலில் உள்ளபடியே இருக்க வேண்டும். ஆங்கிலம்
போன்ற பிற மொழிகளில் கூறியிருக்கும் ஒரு தகவலை மேற்கோளாகக் காட்ட
வேண்டியிருந்தால்