அந்தத் தகவலைத் தமிழில் மொழிபெயர்த்துத் தர வேண்டும். மொழிபெயர்ப்பைச் சரிபார்த்துக்கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் மூலப் பகுதியை அடிக் குறிப்பில் தர வேண்டும். 2.2 ஒருவரின் பெயருக்குரிய தலைப்பு எழுத்து ஆங்கில எழுத்தில் இருக்குமானால் அது தனியாக எந்த முறையில் ஒலிக்கப்படுகிறதோ அந்த முறையில் ஒலிப்பைக் காட்டும் தமிழ் எழுத்துக்களில் தர வேண்டும். A.K. ராமானுஜன் என்பதை ஏ.கே. ராமானுஜன் என்றும் M. இசரயல் என்பதை எம். இசரயல் என்றும் தர வேண்டும். 2.3 ஒரே நூல் அல்லது கட்டுரை தொடர்ந்து ஆதாரமாகக் காட்டப்படும்போது முதலில் மட்டும் சுருக்கமாக விவரங்களைத் தந்துவிட்டுப் பின்னர் ‘மேலது/மேற்காட்டியது’ என்று தரலாம். முதலில் ஆதாரமாகக் காட்டிய நூல் முதலியவற்றை வேறிடத்தில் காட்ட வேண்டிய தேவை இருக்கும்போது ‘முன்னர் காட்டியது’ என்று தரலாம். ஒரே நூல் மீண்டும்மீண்டும் காட்டப்படுவதைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் இவை. 2,4 ஆய்வேடு, ஆய்வறிக்கை போன்றவை துணைநூற்பட்டியலில் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டிருப்பது அவை அச்சிடப்படவில்லை என்பதைக் காட்டும். 3. தகவல்களும் எடுத்துக்காட்டுகளும் 3.0 நூல்கள், இதழ்கள், அச்சிடப்படாதவை, நேர்க்காணல், மின் ஊடகம் ஆகியவற்றைத் துணைநூற்பட்டியலில் எவ்வாறு காட்ட வேண்டும் என்பது (வேண்டிய இடங்களில் உட்பிரிவுகளுடன் கீழே) விளக்கப்படுகிறது. 3.1 நூல்கள் 3.1.1 ஆசிரியர் | ஆசிரியர் ஒருவர்; | அழகிரிசாமி கு. 1956. தவப்பயன், சென்னை: தமிழ்ப் புத்தகாலயம். | ஆசிரியர் இருவர் அல்லது மூவர் | திருமலை எம்.எஸ்., கருணாகரன் கி. 1970. மொழியியல், அண்ணாமலைநகர்: சிவகாமி அச்சகம். | | |
|
|