பக தொகுதிகளாகவெளிவந்த நூல்: | செல்லப்பா சி.சு. 1997. சுதந்திர தாகம், பாகம் 1-3, சென்னை: எழுத்து-வெளி வெளியீடு. |
தலைப்பு உள்ள முகவுரை அல்லது முன்னுரையைக் காட்டுதல்: | வேங்கடாசலபதி ஆ.இரா. 1994. “கனவு மெய்ப்படுகின்றது” (முகவுரை), பாரதியின் கருத்துப் படங்கள், சென்னை: (விற்பனை உரிமை) நர்மதா பதிப்பகம். |
3.1.4 பதிப்பு |
வெளியான நூலின் பதிப்பு எண் பல தரப்பட்டிருந்தால் இறுதி பதிப்பைத் தரவும்: | சிவஞானம் ம.பொ. 1965. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு, மூன்றாம் பதிப்பு, சென்னை: இன்ப நிலையம். |
ஒரு பதிப்பின் மறுபதிப்பைக் குறித்த தகவல் தருதல் | புறநானூறு. 1985. உ.வே. சாமிநாதையரின் ஆறாம் பதிப்பின் மறுபதிப்பு, தஞ்சாவூர்: தமிழ்ப்பல்கலைக்கழகம். |
3.2 அகராதி, கலைக்களஞ்சியம் |
அகராதியிலிருந்து ஒரு தகவலை மேற்கோளாகக் காட்டுதல் | க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி. 1994. மறுபதிப்பு இல்லை என்ற சொல்லின் கீழ். |
கலைக்களஞ்சியத்திலிருந்து ஒரு தகவலை மேற்கோளாகக் காட்டுதல் | அறிவியல் களஞ்சியம், தொகுதி மூன்று. 1987. ஆள்காட்டிக்கருவி என்ற சொல்லின் கீழ். |
3.3. ஆய்வேடு, இதழ்கள் |
ஆய்வேடுகளிலும் இதழ்களிலும்வெளியான கட்டுரையைக் காட்டுதல் | பாலசுப்பிரமணியம் பெ. 1993. மலேசியச் செவ்வழக்கு”, தமிழியல்/Journal of Tamil Studies, எண் 43 & 44. வசந்தி சீ. 1996. “பண்டைய ஓவியங்களும் அவற்றைப் பாதுகாக்கும் முறைகளும்”, கலைமகள் (தீபாவளி மலர்). ராஜதுரை எஸ்.வி. “குற்றமும் தண்டனையும்”, காலச்சுவடு, ஜனவரி-மார்ச், 1989. |