பக்கம் எண் :

14

 
  (அ) நீதிபதி: நீ திருடியது உண்மைதானா?
குற்றவாளி: இல்லை.
(ஆ) முதலமைச்சர்: காவேரி நீர் தொடர்பாக நியாயம் பெற நாங்கள் பதவி
இழக்கவும் தயார்.
(இ) கல்வி அமைச்சர்: எல்லாப் பள்ளிகளுக்கும் கணினி வழங்கப்படும்.
 
3.1.5 விவரங்களைப் பட்டியல் முறையில் ஒன்றன்பின் ஒன்றாகத் தரும்போது
  பெயர்: மா. அங்கயற்கண்ணி
பிறந்த தேதி: 19.08.1966
பிறந்த ஊர்: தஞ்சாவூர்
 
3.1.6 ஒருவரை அவருடைய செயல்பாட்டோடு அல்லது செயல்பாட்டுக்கு
உரியதோடு தொடர்புபடுத்த
 
  (அ) பேட்டி: மணி
(ஆ) வசனம்: சோமு
(இ) வயலின்: சந்திரசேகர்
(ஈ) மிருதங்கம்: மணி
 
3.1.7 நாளேட்டுத் தலைப்புச் செய்திகளில் தலைப்பை முதன்மைப்படுத்திக்
கூறும்போது அந்தத் தலைப்புக்கும் அதனோடு தொடர்புடைய நபர்,
நிறுவனம் போன்றவற்றுக்கும் இடையில்
 
  (அ) இடைத்தேர்தல், சேஷன் ஆணை
(ஆ) ஒப்படைப்புச் சரக்கு வரி; மத்திய அரசு சட்டம் இயற்றத் தமிழக
அரசு வலியுறுத்தல்
 
3.1.8 நாளேட்டுத் தலைப்புச் செய்திகளில் இடத்தையும் நிகழ்ச்சியையும்
தொடர்புபடுத்தும்போது அவற்றுக்கு இடையில் (ஒ.நோ. 15.1.11)
 
(அ) மயிலாப்பூர்; இடைத்தேர்தல்
(ஆ) அலங்காநல்லூர்; ஜல்லிக்கட்டு