4. முற்றுப்புள்ளி (.) |
| (இங்கு கூறப்படும் முற்றுப்புள்ளியும் அடுத்ததாக விளக்கப்படும் புள்ளியும் பயன்பாட்டு அளவில் மட்டுமே வேறானவை. வாக்கியத்தின் முடிவில் பயன்படுத்தப்படுவது முற்றுப்புள்ளி: ஏனைய இடங்களில் பயன்படுத்தப்படுவது புள்ளி. ஆனால், குறியீடு இரண்டிற்கும் ஒன்றுதான்.) |
4.1 பின்வரும் இடங்களில் முற்றுப்புள்ளி பயன்படுத்தப்படுகிறது. |
| |
4.1.1 கூற்று வாக்கியத்தின் முடிவில் |
| (அ) திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். (ஆ) இந்தப் புத்தகம் எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடிய, எளிய நடையில் எழுதப்பட்டிருக்கிறது. |
4.1.2 ஏவல் வாக்கியத்தின் முடிவில் |
| (அ) பத்தாம் பாடத்தைப் படி. (ஆ) புத்தகத்தின் பின்பகுதியில் தரப்பட்டுள்ள தமிழ்க் கலைச்சொல் அகரவரிசையைப் பார்க்கவும். (இ) ஏய், அந்தப் பக்கம் போகாதே. |
4.1.3 மேற்கோள்குறி பெற்றுவரும் வாக்கியத்தின் இறுதியில் மேற்கோள்குறிக்கு முன் |
| “இந்த உலகில் உள்ள உயிரினங்களுள் மனிதன் மிகவும் உயர்ந்தவன்.” |
4.1.4 கிடக்கை வரிசையில் அமைக்கும் பட்டியலின் இறுதியில் |
| ஐந்து வகைச் சுண்ணாம்புக் கற்கள் தமிழ்நாட்டில் கிடைக்கின்றன. அவை: 1. படிகவயச் சுண்ணாம்புக் கல், 2. கடல் வண்டலில் தோன்றிய சுண்ணாம்புக் கல், 3. பவளச் சுண்ணாம்புக் கல், 4. சுக்கான் பாறை, 5. கிளிஞ்சல் சுண்ணாம்புக் கல். |
4.1.5 கிடக்கை வரிசையில் அமைக்கும் முகவரியின் இறுதியில் |
| மு. சிவப்பிரகாசம், கதவு எண் 22, தெற்குத் தெரு, செந்துறை அஞ்சல், பெரம்பலூர் மாவட்டம். |