பக்கம் எண் :

16

4.1.6 ஒரு வாக்கியம் முழுவதும் பிறை அடைப்பிற்குள் வந்தால் முடிவில்
வரும் பிறை அடைப்பிற்கு முன்னால்
 
  மக்களுக்கு நீதி, அரசு, மதம் எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை
இல்லாமல் போய்விடும். (அது மதக் கலவரத்தைவிட அபாயகரமானது.)
 
4.1.7 ஒரு வாக்கியத்தின் முடிவில் கூடுதல் தகவல் பிறை அடைப்பிற்குள்
தரப்பட்டிருந்தால் பிறை அடைப்பிற்கு வெளியே
 
  (அ) புழுக்கள் எவ்வாறு பரவுகின்றன என்பதையும் அவை பரவாமல் இருக்க
என்னென்ன செய்யலாம் என்பதையும் அந்தத் தாயிடமும் குழந்தையிடமும்
விவரமாகச் சொல்லுங்கள் (பார்க்க அத்தியாயம் 13).
(ஆ) மூட்டு முற்றிலும் குணமாவதற்கு முன்னதாகக் கட்டைப் பலமாக அசைக்கக்
கூடாது (2 அல்லது 3 மாதங்கள்).
(இ) சில ஆங்கிலச் சொற்கள் பெருவழக்காக உள்ளன (பஸ் போன்றவை).
 
5. புள்ளி (.)
   
5.1 புள்ளி இட வேண்டிய இடங்கள்:
   
5.1.1 சுருக்கக் குறியீடாக உள்ள எழுத்தை அடுத்து
 
  (அ) இ.ஆ.ப.
கி.பி.
கி.மு.
பி.கு.

(ஆ) பி.இ.
பி.ஏ.
எம்.பி.பி.எஸ்.

(இ) பக்.
ரூ.

சுருக்கக் குறியீடாக உள்ள எழுத்துக்களை அடுத்து விகுதிகள்
சேர்க்கப்படும்போதும் புள்ளி இருக்க வேண்டும்.