பக்கம் எண் :

17

 
  (ஈ) உ.பி.யில்
ஐ.நா.வின்
எம்.பி.க்கள்
 
5.1.2. ஒருவரின் பெயருக்கு முன்னோ பின்னோ வரும் தலைப்பு
எழுத்துக்களை அடுத்து
 
  (அ) பொ.மு. குடியரசன்
எ. அன்பரசன்
சுப. அருணாசலம்
(ஆ) இறையன்பு, சொ.வி.
சுந்தரம், இராம.
5.1.3 வரிசைக்குப் பயன்படுத்தும் எண் அல்லது எழுத்தை அடுத்தும் வரிசை
எண்ணின் உட்பிரிவாக வரும் எண்களின் இடையிலும்
  (அ) தென்னிந்திய மொழிகள்:
1. தமிழ்
2. தெலுங்கு
3. கன்னடம்
4. மலையாளம்
(ஆ) மனிதனின் மூன்று அடிப்படைத் தேவைகள்:
அ. உண்பதற்கு உணவு
ஆ. உடுப்பதற்கு ஆடை
இ. வசிப்பதற்கு இடம்

(இ) 1.1 முன்னுரை
1.2 தமிழ் இலக்கியங்கள்

1.2.1 சங்க இலக்கியம்

1.2.2 இடைக்கால இலக்கியம்

1.2.3 இக்கால இலக்கியம்
   
5.1.4 எண்ணால் குறிக்கப்படும் தேதியின் பின்னும் மாதத்தின் பின்னும்
16.05.99