1. இலக்கண அமைப்பில் சொற்கள் |
1.1 பெயர் + பெயர் |
1.1.1 முதல் சொல் ஓரசையாகவும் அதில் வரும் உயிர் குறிலாகவும் இருந்து (எ-டு கண்) அடுத்து வரும் சொல் உயிரெழுத்தில் தொடங்குமானால் முதல் சொல்லின் இறுதி மெய்யெழுத்து இரட்டிக்கும். இவ்வாறு இரட்டிக்கும்போது இரு சொற்களையும் சேர்த்து எழுத வேண்டும். கண்ணசைவு (கண்+ அசைவு) மண்ணாசை (மண் +ஆசை) மெய்யன்பு (மெய் + அன்பு) கல்லடி (கல் + அடி) உள்ளறை (உள் + அறை) 1.1.2 முதல் பெயர்ச்சொல் ஓரெழுத்தாக (பூ, தீ போன்று) இருந்து அடுத்து வரும் சொல் வல்லெழுத்தில் (க,ச,த,ப) தொடங்குமானால் அந்த வல்லெழுத்து மிகும். இவ்வாறு மிகும்போது இரு சொற்களும் சேர்த்து எழுதப்படுகின்றன. தீச்சுடர் மாக்கோலம் பூச்செடி | |
1.1.3அ ஓரசை அல்லது ஈரசையாக இருக்கும் முதல் சொல்லின் இறுதி எழுத்து மெய்யெழுத்தாக இருந்தால் அடுத்து வரும் சொல்லின் முதல் எழுத்தான உயிரெழுத்து மெய்யெழுத்துடன் சேர்த்து (உயிர்மெய் எழுத்தாக) எழுதப்படுகிறது. (சில தொகைச் சொற்களில் மட்டுமே இவ்வாறு சேர்த்து எழுதப்படுகிறது.) | 1.1.3ஆ இரண்டாவது சொல்லால் முதல் சொல்லின் இறுதியில் ஒற்று மிகும்போது சொற்கள் இடம்விட்டு எழுதப்படுகின்றன; முதல் சொல்லின் இறுதி எழுத்தும் அடுத்து வரும் சொல்லின் முதல் எழுத்தும் சேரும்போது மாற்றம் அடையும் என்பதால் அந்த மாற்றம் தவிர்க்கப்படும் முறையில் |