பக்கம் எண் :

37

தாயன்பு (தாய் அன்பு)
உயிரோட்டம் (உயிர் ஓட்டம்)
குழலோசை (குழல் ஓசை)
சொற்கள் இடம்விட்டு எழுதப்படுகின்றன.

     பலாக் கொட்டை
     ஆட்டுத் தலை
     குதிரைக் குளம்பு
     உயிர்ச் சேதம்
     தமிழ்ப் பணி
     முதல் பாடம்
     பொன் தகடு (முதற்பாடம் என்றும்
     பொற்றகடு என்றும் எழுதுவதில்லை.)
1.1.4அ ஓரசைச் சொற்களில் உள்ள ல், ள், ன்
என்னும் இறுதி மெய்யெழுத்துக்கள் அடுத்து
வரும் சொல்லால் வேறொரு எழுத்தாக
மாற்றம் அடைவதை ஏற்றுக்கொண்ட
நிலையில் இரண்டு சொற்களையும் சேர்த்து
எழுத வேண்டும்.

     பாற்சோறு (பால் + சோறு)
     நெற்பயிர் (நெல் + பயிர்)
     ஆட்குறைப்பு(ஆள்+குறைப்பு)
     பொற்குடம் (பொன் + குடம்)
1.1.4ஆ பல அசைகளால் ஆன சொற்களில்
உள்ள ம் என்னும் இறுதி மெய்யெழுத்து
அடுத்து வரும் சொல்லால் மறைந்தாலும்
மறைந்து ஒற்று ஏற்கும்போதும் ய், ழ்
என்னும் இறுதி மெய்யெழுத்துக்கள் ஒற்று
ஏற்கும்போதும் சொற்களை இடம்விட்டு
எழுத வேண்டும்.

     அரசாங்க விலை
     பணத் திமிர்
     எண்ணெய்ச் சட்டி
     மிளகாய்த் தோட்டம்
     தமிழ்ப் பாடம்

1.2 பெயர் + பெயர் (உடம்படுமெய்)

1.2.1 உயிரெழுத்தில் முடியும் சொற்களின்
பின் உயிரெழுத்தில் தொடங்கும் சொற்கள்
வரும்போது ய் அல்லது வ் என்னும்
உடம்படுமெய்யுடன் எழுதுவது
தவிர்க்கப்பட்டு இடம்விட்டே
எழுதப்படுகின்றன.

     அணு உலை
     கொசு ஒழிப்பு