1.4.1அ பெயரடை ஒரு எழுத்தாகவோ (எ-டு மா) ஓரசையாகவோ (ஏழ், நல்) இருக்குமானால் அடுத்து வரும் சொல்லுடன் சேர்த்து எழுத வேண்டும். ஏழுலகு (ஏழ்+உலகு) ஓராண்டு (ஓர்+ஆண்டு) காரிருள் (கார்+இருள்) நற்செயல் (நல் +செயல்) பேராசை (பேர்+ஆசை) மாபெரும் (மா+பெரும்) மூவுலகு (மூ+உலகு) வெண்தாடி (வெண்+தாடி) | 1.4.1ஆ ஓரசை அல்லாத, பல அசைகளால் ஆன பெயரடைகளை இடம்விட்டு எழுத வேண்டும். அரிய ஒற்றுமை இளம் எழுத்தாளர் ணூடும் எரிச்சல் கெட்ட பழக்கம் சிறிய வீடு நல்ல பெயர் புதிய உலகம் வெறும் ஓசை |