1.5 பெயர் + இடைச்சொல் 1.5.1அ முதல் சொல்லில் வேற்றுமை உருபு இல்லாதபோது அடுத்து வரும் கீழ், குறித்த, குறித்து, பற்றி, பற்றிய, மீதான, மீது, மூலம், மேல் முதலிய இடைச்சொற்களைச் சேர்த்து எழுத வேண்டும். என்கீழ் விழாகுறித்து இதுபற்றி கிளைமீது ஆள்மூலம் கூரைமேல் | 1.5.1ஆ முதல் சொல் வேற்றுமை உருபு ஏற்று வருகிறபோது அடுத்து வரும் கீழ், குறித்த, குறித்து, பற்றி. பற்றிய, மீதான, மீது, மூலம், மேல் முதலிய இடைச்சொற்களை இடம்விட்டு எழுத வேண்டும். பெட்டியின் கீழ் விழாவைக் குறித்து இதைப் பற்றி ணூளையின் மீது ஆளின் மூலம் கூரைக்கு மேல் | 1.6 பெயர் + வினை 1.6.1 ஒரு பெயர்ச்சொல்லை வினைப்படுத்துகிற வினையை அந்தப் பெயர்ச்சொல்லோடு சேர்த்து எழுத வேண்டும். கைதுசெய் கவலைப்படு பழக்கமாகு (க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் பின்வரும் வினைகள் வினைப்படுத்தும் வினைகளாகத் தரப்பட்டிருக்கின்றன: அடி2, ஆக்கு2, ஆகு2, இடு2, உறு2, எடு2, செய்2, படு2, படுத்து2, பண்ணு2, பார்2, பிடி3, புரி2, பேசு2, போடு2, முடி4, வகி2.) 1.7 வினையடி + பெயர் 1.7.1 வினையடியைத் தொடர்ந்து வருகிற பெயர்ச்சொல் தொகையாக (வினைத்தொகையாக) இருக்குமானால் சேர்த்து எழுத வேண்டும். | | | |
|
|