பக்கம் எண் :

40


     குடிதண்ணீர்
     கொதிநீர்
     வளர்தொழில்
     வெடிபொருள்

(மேலே காட்டிய எடுத்துக்காட்டுகளில் குடி,
கொதி, வளர், வெடி ஆகியவை வினையடிகள்.)

1.7.2 பெயர் + வினையடி + பெயர்

1.7.2.1 வினையடியின் முன் பெயர்ச்சொல்
வருகிறபோது அந்தப் பெயர்ச்சொல்லுடன்
வினையடி சேர்த்து எழுதப்படுகிறது.

     கடல்வாழ் உயிரினங்கள்
     அரசுசார் நிறுவனம்
     பாசமிகு தம்பி
     புலனறி உணர்வு

(மேலே காட்டிய எடுத்துக்காட்டுகளில் வாழ்,
சார், மிகு, அறி ஆகியவை வினையடிகள்.)

1.8 வினை + வினை

1.8.1 துணை வினையை அல்லது துணை
வினைகளை முதன்மை வினையோடு சேர்த்து
எழுத வேண்டும். (எடுத்துக்காட்டுகளில்
முதன்மை வினை தடித்த எழுத்துக்களில்
காட்டப்பட்டுள்ளது.)

     படித்திருக்கிறேன். (படித்து இருக்கிறேன்)
     சிரித்துக்கொண்டான் (சிரித்துக்
     கொண்டான்)