கொடுத்தாயிற்று (கொடுத்து ஆயிற்று) போய்த்தொலை (போய்த் தொலை) எடுத்துக்கொண்டுவிட்டேன் (எடுத்துக் கொண்டு விட்டேன்) துண்டிக்கப்பட்டுவிட்டது (துண்டிக்கப் பட்டு விட்டது) கிடைக்கப்பெற்றேன் (கிடைக்கப் பெற்றேன்) அடைப்புக்குறிக்குள் தந்திருப்பதுபோல எழுதுவது துணை வினையின் இலக்கணத் தகுதியையும் கருத்து ஒருமையையும் சிதைப்பதாக அமையும். (க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் பின்வரும் வினைகள் துணை வினைகளாகத் தரப்பட்டிருக்கின்றன: அடி2, அருள்2, ஆக்கு2, ஆகு2, இடு2, இரு2, உறு2, எடு2, எழு2, எறி2, ஒழி2, ஓங்கு2,, கட்டு2, காட்டு2, காண்பி2, கிட2, குவி3, கூடு2, கொடு2, கொள்2, சா2, செய்2, தள்ளு2, தா2, திரி3, தீர்2, தீர்4, தொலை2, தொலை4, நில்2, நேர2, படு2, படுத்து2, பண்ணு2, பார்2, பிடி3, புரி2, பெறு2, பேசு2, போ2, போடு2, முடி4, வகி2, வா2, விடு2, வை2.) 1.9 செ(ய்)ய வினையெச்சம் + (காரண) வினை 1.9.1 செ(ய்)ய என்னும் வினையெச்சத்துடன் (எ-டு போக, வர, நிற்க) செய், பண்ணு, வை முதலிய (காரண ஆக்க) வினைகளைச் சேர்த்து எழுத வேண்டும். (அ) அவனைக் கடைக்குப் போகச்செய்தேன். (ஆ) குழந்தையைத் தூங்கப்பண்ணு. (இ) என்னை அழவைத்தான். (க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் பின்வரும் வினைகள் காரண ஆக்க வினைகளாகத் தரப்பட்டிருக்கின்றன; அடி2, செய்2, பண்ணு2, வை2.) | | | |
|
|