பக்கம் எண் :

42

1.10 (செய்து) வினையெச்சம் + வினை

1.10.1 உகரத்தில் முடியும் செய்து என்னும்
வினையெச்சங்கள் அவற்றின் பின் வரும்
(உயிரெழுத்தில் தொடங்கும்) வினைச்
சொற்களுக்கு நிகழ்வு நடந்த முறையைக்
காட்டும் அடையாக வரும்போது பெரும்பாலும்
சேர்த்து எழுதப்படுகின்றன.

     கேட்டறிந்தேன் (கேட்டு + அறிந்தேன்)
     தொட்டுணரலாம் (தொட்டு + உணரலாம்)
     உருண்டோடியது (உருண்டு + ஓடியது)

1.11 இரட்டைச் சொற்கள்

1.11.1 மரபாக இணைந்து வரும் பெயர்ச்
சொற்கள், ‘உம்’ மறைந்து
(உம்மைத்தொகையாக) வரும்போது சேர்த்தே
எழுதப்படுகின்றன.

   செடிகொடி
   இலைதழை
   காய்கனி
   கணக்குவழக்கு
   கஷ்டநஷ்டம்
   கைகால்
   தாய்தந்தை

1.11.2 இரட்டித்து வரும் சொற்கள் சேர்த்தே
எழுதப்படுகின்றன.

   சிறுசிறு
   திரும்பத்திரும்ப
   முத்துமுத்தாக