1.12 முன்னும் பின்னும் வரும் சொற்கள் 1.12.1அ அடை ஏற்று வரும் பெயர்ச்சொல்லை அடுத்து மற்றொரு பெயரோ வினையோ வருமானால் அடையும் பெயரும் சேர்த்து எழுதப்படுகின்றன. இரு வழி: இருவழிப் பாதை பணத் திமிர்: பணத்திமிர் பிடித்த | 12.1ஆ சேர்த்து எழுதப்படும் சொற்களில் உள்ள பெயர்ச்சொல் அடை ஏற்கும் நிலையில் அந்த அடையுடன் சேர்வதால் பிரித்து எழுதப்படுகிறது. இது போன்றே சேர்த்து எழுதப்படும் சொல் விகுதிகள் இணையும்போது பிரித்து எழுதப்படுகிறது. குற்றம்சாட்டு் : கொலைக்குற்றம் சாட்டு பெயரெடு: நல்லபெயர் எடு மணியோசை: ஆலயமணி ஓசை வேறிடம்: வேறு இடத்தில் வேறுசில: வேறு சிலவும் வேறுபல: வேறு பலவற்றை 1.13 இடைச்சொல் ஏற்கும் சொற்கள் 1.13.1 சேர்த்து எழுதப்பட வேண்டிய சொற்களின் முதல் சொல்லில் ஆ, ஏ, ஓ, உம், ஆவது முதலிய இடைச்சொற்கள் சேரும்போது இரண்டாவது சொல்லைப் பிரித்து எழுத வேண்டும். (இரண்டாவது சொல்லோடும் இடைச்சொற்கள் சேரலாம். முடித்தா விட்டான் (முடித்துவிட்டான்) வந்தே விட்டது (வந்துவிட்டது) போயே தொலைந்தான் (போய்த்தொலைந்தான்) பறந்தோ போகும் (பறந்துபோகும்) அழவும் வைத்தான் (அழவைத்தான்) ரூகையோ நட்டோ (நகைநட்டு) ணூணக்காவது வழக்காவது (கணக்குவழக்கு) |