2.2அ அடை ‘உ’ வில் முடியும் சொற்களோடு இந்த வினைச்சொல்லைச் சேர்த்தே எழுதலாம். (அ) நான் வியப்படைந்தேன். (ஆ) நாங்கள் சோர்வடைந்துவிட்டோம். 2.3 அருகில், அருகே ‘உ’ வில் முடியும் சில சொற்களின் பின் இவை சேர்த்து எழுதப்படுகின்றன. கதவருகில் கிணற்றருகே | 2.2ஆ அடை உயிரெழுத்தில் (‘உ’ தவிர) முடியும் சொற்களின் பின்னும் மெய்யெழுத்தில் முடியும் சொற்களின் பின்னும் இந்த வினைச் சொல்லை இடம்விட்டு எழுதலாம். (அ) நான் மகிழ்ச்சி அடைந்தேன். (ஆ) நாங்கள் பெருமை அடைகிறோம். (இ) நான் குழப்பம் அடைந்திருக்கிறேன். |