2.6அ அல்லவா ஒரு வாக்கியத்தின் பயனிலை தவிர்ந்த பிற சொற்களோடு சேர்த்து எழுத வேண்டும். (அ) நீயல்லவா இதைச் சொல்லியிருக்க வேண்டும்? (ஆ) அவர் வெளிநாட்டுக்கல்லவா போயிருக்கிறார்? (இ) நீ கேட்டாலல்லவா கிடைக்கும்? | 2.6ஆ அல்லவா ஒரு வாக்கியத்தின் பயனிலையை அடுத்து வரும்போது இடம்விட்டு எழுத வேண்டும். (அ) நீ இதைச் சொல்லியிருக்க வேண்டும்,அல்லவா? (ஆ) அவர் வெளிநாட்டுக்குப் போயிருக்கிறார், அல்லவா? (இ) நீ கேட்டால் கிடைக்கும், அல்லவா? (ஈ) நீ குமாருடைய தம்பி, அல்லவா? 2.7 அல்லாமல் இது இடம்விட்டே எழுதப்படுகிறது. (அ) நீ அல்லாமல் வேறு யார் எனக்குத் துணை? |