2.8அ அளவு, அளவில், அளவுக்கு 1, ஒரு எழுத்தாக உள்ள சொல்லுடன் அல்லது ஒரு எழுத்துடன் ஒரு மெய்யெழுத்து இணைந்த சொல்லுடன் இவற்றைச் சேர்த்து எழுத வேண்டும். கையளவு உன்னளவில் மாரளவுக்கு 2. ‘செய்யும்’ போன்ற பெயரெச்சத்தோடு இவை சேர்த்தே எழுதப்படுகின்றன. (அ) அவன் அடிக்குமளவுக்குப் போய்விட்டான். (ஆ) நீ வேண்டுமளவு சாப்பிடலாம். | 2.8ஆ அளவு, அளவில், அளவுக்கு 1. ‘செய்த’ போன்ற பெயரெச்சத்தின் பின் இடம்விட்டே எழுதப்படுகின்றன. (அ) என்னால் முடிந்த அளவு கண்டித்தேன். (ஆ) அதைக் கேட்ட அளவில் மயங்கி விழுந்தார். 2. ‘செய்யும்’ போன்ற பெயரெச்சம் நீண்டதாக (கூட்டுவினை அல்லது துணை வினை சேர்ந்த எச்சமாக) இருக்குமானால் அதன் பின்னால் இவை தனித்தே எழுதப்படுகின்றன. (அ) எல்லாரும் புரிந்துகொள்ளும் அளவில் இல்லை. (ஆ) உளவுத்துறையினரால் கண்காணிக்கப்படும் அளவுக்கு... |