பக்கம் எண் :

47

எழுத வேண்டும்.

     (அ) நீதிபதி தீர்ப்பளித்தார்.
     (ஆ) மக்கள் இவருக்கு
     ஆதரவளிப்பார்கள்.
 
 
2.10அ அற்ற

பெயர்ச்சொல்லுடன் இதைச் சேர்த்து எழுத
வேண்டும்.

     சிந்தனையற்ற பேச்சு
     மணமற்ற மலர்
     கவலையற்ற வாழ்க்கை
2.10ஆ அற்ற

பெயர்ச்சொல்லோடு அடை சேரும்போது
இது பிரித்தே எழுதப்படுகிறது. (காண்க:
1.12.1ஆ)

     (அ) சுயசிந்தனை அற்ற ஒருவர்
     (ஆ) நறுமணம் அற்ற மலர்
 
2.11 ஆகட்டும்

‘இருக்கட்டும்’ என்னும் பொருளில்
பயன்படுத்தும்போது சேர்த்து எழுத
வேண்டும்.

அதிகாரியாகட்டும் யாராகட்டும் விதியை மீறக் கூடாது.
பேசுவதாகட்டும் எழுதுவதாகட்டும் நாணயம் இருக்க வேண்டும்.
 
 
2.12அ ஆகாது

‘கூடாது’ என்னும் பொருளில் வரும்போது
சேர்த்து எழுதப்படுகிறது.

     (அ) இதற்குக் கவலைப்படலாகாது.
     (ஆ) இவர்களுக்கு இரங்குதலாகாது.
2.12ஆ ஆகாது

‘இல்லை’ என்னும் பொருளில் வரும்போது
இடம்விட்டு எழுதப்படுகிறது.

     (அ) இவ்வாறு செய்வது
     குற்றம் ஆகாது.
     (ஆ) இது ஒரு சமாதானம் ஆகாது.
 
2.13அ ஆகிய

பொதுச் சொல்லுடன் சிறப்புச் சொல்லையோ
அதன் பிரிவுகளையோ தொடர்பு
படுத்தும்போது சேர்த்து எழுத வேண்டும்.
2.13ஆ ஆகிய

ஒரு தொகுப்பாகக் கூறியதன் பின் வரும்
போது தனித்து எழுத வேண்டும்.