(ஆ) மழை பெய்யுமானால் மாற்று ஏற்பாடு வேண்டியதுதான். (இ) அவர் வீட்டில் இருப்பாரானால் அழைத்துவா. (ஈ) அவள் அழுகிறாள்; நீயானால் சிரிக்கிறாய். 2.17 ஆனாலும் ‘ஆயினும்’ என்பதுபோல் சேர்த்து எழுத வேண்டும். (அ) எதுவானாலும் நடக்கட்டும். (ஆ) பிரபல நடிகர் நடிக்கவில்லை; ஆனாலும்,படம் வெற்றி பெற்றுவிட்டது-> பிரபல நடிகர் நடிக்கவில்லையானாலும் படம் வெற்றிபெற்றுவிட்டது. 2.18 இ அடுத்து வரும் சொல்லோடு இந்தச் சுட்டெழுத்து சேர்த்தே எழுதப்படுகிறது. இக்கணமே இச்செய்தியால் இவ்வூரில் (காண்க: 2.1, 2.32) | |