2.29 உள் ஓர் அமைப்பின் பகுதியைக் காட்டுவதாகப் பொருள் தரும்போது அடுத்து வரும் சொல்லோடு சேர்த்து எழுதப்படுகிறது. (அ) உள்நாட்டுச் செய்திகள் (ஆ) உள்கட்சிப் பூசல் | |
2.30 அ உள்ள ‘ஒன்றிற்கு/ஒருவருக்கு உரிய(து)’ என்ற பொருளில் சேர்த்து எழுத வேண்டும். (அ) நிறமுள்ள பூக்கள் (ஆ) உனக்குள்ள தைரியம | 2.30ஆ உள்ள ‘இருக்கிற’ என்ற பொருளில் பயன்படுத்தும்போது இடம்விட்டு எழுத வேண்டும். (அ) வீட்டில் உள்ள பொருள்கள் (ஆ) மனதில் உள்ள ஆசைகள் |
2.31 ஊடாக/ஊடே ‘இன்’ ஏற்ற பெயர்ச்சொல்லின் பின் சேர்த்து எழுத வேண்டும். (ஆ) கிளைகளினூடாக சூரிய ஒளி (ஆ) ஜன்னல் கம்பிகளினூடே உருவம் தெரிந்தது. 2.32 எ அடுத்து வரும் சொல்லோடு இந்தச் சுட்டெழுத்து சேர்த்தே எழுதப்படுகிறது. எக்காலத்தில் எத்தகவலும் எவ்வேறுபாடும் (காண்க: 2.1, 2.18) | |