பக்கம் எண் :

54

2.33 எங்கும்

‘எல்லா இடத்திலும்’ என்னும் பொருளில்
வேற்றுமை உருபு இல்லாத
பெயர்ச்சொற்களுடன் சேர்த்து எழுத
வேண்டும்.

     (அ) தெருவெங்கும் தோரணம்
     (ஆ) ஊரெங்கும் கொண்டாட்டம்
 
  2.34 எதிர்

எல்லா இடங்களிலும் தனித்தே
எழுதப்படுகிறது.

     (அ) எதிர்த் திசை
     (ஆ) எதிர் நடவடிக்கை
 
2.35அ எல்லாம்

1. ‘தொடர்புடைய பிறவும்’ அல்லது
‘முழுவதும்’ என்னும் பொருளில்
பயன்படுத்தும் போது சேர்த்து எழுத
வேண்டும்.

     (அ) கல்யாணமெல்லாம் நன்றாக
     நடந்ததா?
     (ஆ) செய்தியெல்லாம் கேட்டேன்.
     (இ) அறையெல்லாம் சுத்தமாக
     இருந்தது.
     (ஈ) கையெல்லாம் வலிக்கிறது.
2. பெயரெச்சத்துடன் சேர்ந்து வரும் ‘போது’
என்பதன் பின் சேர்த்து எழுதப்படுகிறது.

     (அ) அவள் வரும்போதெல்லாம்
     பொம்மை வாங்கிவருவாள்.
     (ஆ)கேட்கும்போதெல்லாம் பணம்
     கொடுக்க முடியாது.
2.35ஆ எல்லாம், எல்லாரும்/எல்லோரும்

1. ‘அனைத்தும்’, ‘அனைவரும்’ என்ற
பொருளில் இடம்விட்டே எழுதப்படுகிறது.

     (அ) சாமான் எல்லாம் வந்துவிட்டதா?
     (ஆ)சொந்தக்காரர்கள் எல்லாரும்
     போய்விட்டார்கள்.

2. ஒரு தொகுப்பாகக் கூறியதன் பின்
வரும்போது இடம்விட்டு எழுத வேண்டும்.

     (அ) சொந்த ஊர், பிறந்த ஊர்,
     படித்த ஊர் எல்லாம் மதுரைதான்.
     (ஆ) மணி, பாலு, வசந்தி எல்லோரும்
     என் நண்பர்களே.